PM Modi Speech in Puducherry and Covai : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல நடைபெறவுள்ள நிலையில், உள்ளூர் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைவரும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் தற்போது பாஜக சார்பில் பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, புதுச்சேரி லாஸ்பேட்டையில், நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இனி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வருவது சந்தேகம் தான்.
புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வந்தபோது, கடலோர பகுதியில் உள்ள பெண் ஒருவர் முதல்வர் நாரயணசாமியை பற்றி குறை கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் காங்கிரஸ் கட்சிதான் இயூறாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். புதுச்சேரியின் மகத்துவத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும்.
வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரியை சிறந்த மாநிலமாக உருவாக்குவதே எனது தேர்தல் வாக்குறுதி என்று கூறிய பிரதமர் மோடி பாரத் மாதாகி ஜே என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கோவை வந்தடைந்த பிரதமர் மோடி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வெற்றிவேல் வீரவேல் என்று தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி,மத்திய அரசின் சிறு தொழில் திட்டங்களால், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மிகுந்த பயன் பெற்றுள்ளனர். உலகின் தொன்மையான மொழி தமிழ். தமிழின் பெருமை உலகறிந்த ஒன்று. அதனைத்துறை படிப்புகளும், உள்ளூர் மொழியில் கற்பிக்கவேண்டும். இதனால் இளைஞர்கள் பலர் பெறுவார்கள்..
மேலும் மத்திய அரசின் திட்டம் மூலம் கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"