Advertisment

ஜம்மு காஷ்மீர் அரசியல் : முன்னாள் முதல்வர் மெகபூபாவின் மகள் இல்திஜாவுக்கு புதிய பொறுப்பு 

இல்திஜா கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மெஹபூபா முப்தியின் சமூக வளைதங்களில் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mehbooba daughter Iltija

பிடிபி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி செய்தியாளர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர், மெஹபூபா முப்தியின் சமூக வலைதளங்களை கடந்த 4 ஆண்டுகளாக கவனித்து வந்த அவரது மகள், இல்திஜா முப்தி தற்போது முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) இல்திஜாவை மெஹபூபா முஃப்தியின் ஊடக ஆலோசகராக நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

இல்திஜா கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மெஹபூபா முப்தியின் சமூக வளைதங்களில் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய முக்கியத் தலைவர்கள் தடுப்பு காவலில் இருந்த நேரத்தில், சட்டப்பூர்வ சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்த ஒரு முன்னணி குரலாகவும், கடுமையாக விமர்சிப்பவராகவும் இல்திஜா உருவெடுத்தார்.

தற்போது இல்திஜா முறைப்படி பிடிபி கட்சியில் இணைந்து பற்றி செய்திகள திடீரென வந்தாலும் இது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த 4 ஆண்டுகளில், பிடிபியை நிறுவிய முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரும் இல்திஜாவின் தாத்தா முப்தி முகமது சயீத்தின் கூடாரத்தில் அடியெடுத்து வைக்க அவர் தயாராக இருப்பதற்கான போதுமான அறிகுறிகள் இருந்தது. தற்போது 36 வயதான இல்திஜா, தனது புதிய பதவியை அரசியலில் ஒரு முறையான என்டரியாக பார்க்கவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அவர் கூறுகையில், "நான் முறையாக அரசியலில் சேருவதை ஏற்கவில்லை. “ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்னாள் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதில் மட்டுமே எனது பங்கு உள்ளது. மக்களை தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனமாக ஊடகங்கள் மாறியுள்ளது. இது நிறைய செய்யக்கூடிய இடம் என்று நான் நம்புகிறேன். நான் அவருடைய (முஃப்தியின்) குரலைப் உயர்த்த,  என்னால் முடிந்த வழிகளில் ஊடகங்களைச் சமாளிக்க அவளுக்கு (முப்தி) உதவுவதே எனது பங்கு.

அவரது வாழ்க்கைக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருப்பதாக ஒப்புக்கொண்ட இல்திஜா, “நான் கட்சியில் சேரவில்லை. அது என் பங்கு இல்லை. காஷ்மீர் போன்ற இடங்களில் எல்லாம் அரசியல்தான் என்பது எனக்குத் தெரியும். எல்லாவற்றின் அரசியல் தன்மையையும் மறுக்கும் ஒரு ஆளாக நான் இருக்கப் போவதில்லை, நான் முறையான அரசியலில் இறங்கினால், அது அனைவருக்கும் முறையாக தெரியவரும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5,  அன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தாயார் மெஹபூபா முப்தி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டபோது இல்திஜாவின் அரசியல் பயணம் தொடங்கியது. காஷ்மீரில் பெரும்பாலான முக்கிய அரசியல் தலைவர்கள் காவலில் இருந்த நிலையில், அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று காஷ்மீரில் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்தார்.

அதன்பிறகு இல்திஜா தனது தாயின் சமூக ஊடக கணக்குகளை, குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) கணக்கிற்கு பொறுப்பேற்றார், இதன் விளைவாக அவருக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் உயர்ந்தது. 14 மாதங்கள் கழித்து மெஹபூபாவின் விடுதலைக்குப் பிறகு, தனது ஊடக உரையாடல்கள் மற்றும் சந்திப்புகளின் போது அவரது பக்கத்தில் இல்திஜா காணப்பட்டார். கடந்த ஜூன் 2022 ட்விட்டர் பக்கத்தில் வெளியான “ஆப்கி பாத் இல்திஜா கே சாத் (இல்திஜாவுடன் உரையாடல்கள்)” என்ற இரண்டு வார வீடியோ உரையாடல் தொடரை அவர் தொடங்கினார்.

இதில் ஜம்மு காஷ்மீரை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் முடிவுகள் கூறித்து பேசினார். இதுவே அவர் கட்சியில் முறையான பங்கை வகிக்க திட்டமிட்டுள்ளார் என்பதற்கான முக்கிய அறிகுறி. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இல்திஜா தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்தல் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்தார். ஜனவரி 2 ஆம் தேதியுடன் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகும் நிலையில், ஜூன் 8, 2022 அன்று அவர் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

ஸ்ரீநகர் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) அவருக்கு பாஸ்போர்ட் வழங்காத நிலையில், இதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர்  உயர் நீதிமன்றத்தை அணுகி இல்திஜா தனக்கு பாஸ்போர்ட் புதுப்பித்து புதிய பாஸ்போர்ட் வழங்க ஆர்பிஓ (RPO)- க்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி (சிஐடி) ஆர்ஆர் ஸ்வைனுக்கும் கடிதம் எழுதி, சரிபார்ப்பு செயல்முறையை முடிக்குமாறு கோரிவ்கை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிஐடியின் பாதகமான சரிபார்ப்பு அறிக்கையை மீறி ஆர்பிஓ (RPO)  ஏப்ரல் மாதம் அவருக்கு பாஸ்போர்ட்டை வழங்கியது.

பிப்ரவரியில், இல்திஜாவின் தாய்வழி பாட்டி குல்ஷன் நசீருக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது, "சிஐடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம்" என்று பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரியை நீதிமன்றம் கடுமையாக சாடியது. இல்திஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஹானர்ஸ் பட்டமும், வார்விக் பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷ்னல் ரிலேஷன்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

India Jammu And Kashmir Mehabooba Mufti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment