scorecardresearch

‘லிவ்விங் டுகெதர்’ காதலியை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய காதலன்: சினிமாவை விஞ்சிய கொடூரம்

தலைநகர் டெல்லியில் கால்செண்டர் ஒன்றில ஊழியராக பணியாற்றி வந்தவர் ஷர்தா வாக்கர். இவர் குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அஃப்தாப் பூனாவாலா என்பரை காதலித்து வந்துள்ளார்.

‘லிவ்விங் டுகெதர்’ காதலியை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய காதலன்: சினிமாவை விஞ்சிய கொடூரம்

தனது காதலியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, நகரின் வெவ்வேறு இடங்களில் வீசிய காதலனை டெல்லி டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்த விசாரணையில் 6 மாதத்திற்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கால்செண்டர் ஒன்றில ஊழியராக பணியாற்றி வந்தவர் ஷர்தா வாக்கர். இவர் குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அஃப்தாப் பூனாவாலா என்பரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  ஷர்தா வாக்கர் அஃப்தாப் பூனாவாலா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லியில் வாடகை வீடு எடுத்து லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே ஷர்தா வாக்கர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அஃப்தாப் பூனாவாலாவிடம் கூறியுள்ளார். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அஃப்தாப் பூனாவாலா ஷர்தாவின் விருப்பத்திற்கு செவி சாய்க்காமல் இருந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஷர்தா திருமணம் குறித்து பேசி வந்ததால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அஃப்தாப் பூனாவாலா

இதனிடையே சம்பவத்தன்று திருமணம் குறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஃப்தாப் பூனாவாலா ஷர்தா வாக்கரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து போலீசில் இருந்து தப்பிப்பதற்காக ஷர்தா வாக்கரின் உடலை பல பாகங்களாக வெட்டி டெல்லியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறியதால் மகள் மீதுள்ள கோபத்தில் ஷர்தாவின் பெற்றோர்கள் அவரிடம் பேசாமல் இருந்துள்ளனர். ஆனாலும் அவரது சமூக வலைதளங்களை அவ்வப்போது கண்கானித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக ஷர்தா வாக்கர் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இல்லை என்பதை தெரிந்த அவரது பெற்றோர்கள் அவரை செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லி புறப்பட்டு வந்த அவர்கள் ஷர்தா தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் பார்த்துள்ளனர். அப்பார்மெண்டும் பூட்டிக்கிடந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் பேரில் வழங்ககு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு ஷர்தா வாக்கரின் காதலன் அஃப்தாப் பூனாவாலாவை கைது செய்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர் தங்களது மகள் இவரைத்தான் காதலித்ததாக தங்களது புகாரில் தெரிவித்ததை தொடர்ந்து அஃப்தாப் பூனாவாலா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அஃப்தாப் பூனாவாலாஅந்தப் பெண்ணைக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, கொலை செய்த உடலை தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள வீட்டில் பல நாட்கள் வைத்து பாதுகாத்துள்ளார். அதன்பிறகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உடலை பாகங்களாக வெட்டி அடுத்த சில வாரங்களில் டெல்லியின் பல்வேறு வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் கூறப்படுகிறது.

“நாங்கள் பூனாவாலாவைக் கைது செய்து, கொலைச் சம்பவம் தொடர்பாக அவரிடம் இருந்து ஆதாரங்களை மீட்டுள்ளோம். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அந்த பெண்ணை எப்படி கொன்று உடலை வெட்டினார் என்பதை கூறியுள்ளார். நாங்கள் அவரிடம் விசாரித்து வருகிறோம், மேலும் பெண்ணின் உடலை மீட்க முயற்சிக்கிறோம், ”என்று ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tamil man kills girlfriend chops body and dumps them at various places

Best of Express