Advertisment

பாகிஸ்தான் ஃபேஸ்புக் நண்பரை மணந்த திருமணமான இந்திய பெண் : கணவர் குழந்தைகள் பரிதவிப்பு

இந்திய பெண் அஞ்சு, தான் விருப்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்திருப்பதாகவும், இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian Women Anju

சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குச் சென்ற திருமணமான இந்தியப் பெண் அஞ்சு

2 குழந்தைகளுக்கு தாயான இந்திய பெண் ஒருவர், பேஸ்புக் மூலமாக ஏற்பட்ட காதலால், பாகிஸ்தானில் உள்ள தொலைதூர கிராமத்திற்குச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையில், பாத்திமா என்ற புதிய பெயருடன் தனது பேஸ்புக் காதலரை மணந்துள்ளார்.

Advertisment

இணையதள வளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த காலத்தில் பல நன்மைகள் இருந்தாலும் அவ்வப்போது சில அதிர்ச்சிகரமாக சம்பவங்களும் அரங்கேறி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2 குழந்தைகளுக்கு தாயான இந்திய பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான தனது காதலரை தேடி பாகிஸ்தான் சென்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது இஸ்லாம் மத்திற்கு மாறியுள்ள அவர் தனது காதலரை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இவர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்த அஞ்சுவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பருடன் பழக்கம் ஏற்பட்டு்ளளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், நஸ்ருல்லாவை பார்க்க முறைப்படி விசா பெற்ற அஞ்சு பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனால் தனது 2 குழந்தைகளுடன் அரவிந்த் குமார் பரிதவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீசார் நஸ்ருல்லாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை விசா காலம் முடிந்தவுடன் அவர் நாடு திரும்புவார் என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதனிடையே பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கியிருந்த அஞ்சு அம்மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் முன்னிலையில், உள்ளூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தனது காதலர் நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார். மேலும் அஞ்சு தற்போது இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ள நிலையில், பாத்திமாக என்ற பெயருடன் முறையான நிக்காஹ் செய்யப்பட்டது" என்று அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மொஹரார் நகர காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி முஹம்மது வஹாப் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அளித்துள்ள தகவலின்படி, பாத்திமா (அஞ்சு) நஸ்ருல்லாவின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அப்பர் டிர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மலகண்ட் பிரிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நசீர் மெஹ்மூத் சத்தி இந்த நிக்காஹ்-வை உறுதிப்படுத்தினார். மேலும் இந்தியப் பெண் அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் பாத்திமா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பெண் அஞ்சு போலீஸ் பாதுகாப்பில் இருந்து வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் நிக்காஹ்-வில் கையெழுத்திட்டதாக கூறி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்திய பெண் அஞ்சு, தான் விருப்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்திருப்பதாகவும், இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் (ஜூலை 24), இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுற்றிப் பார்க்கச் சென்றனர். டிர் அப்பர் மாவட்டத்தை சித்ரால் மாவட்டத்துடன் இணைக்கும் லாவாரி சுரங்கப்பாதையை அவர்கள் பார்வையிட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் அழகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற படங்களில், அஞ்சுவும் நஸ்ருல்லாவும் ஒரு பசுமையான தோட்டத்தில் அமர்ந்து கைகளைப் பிடித்தபடி இருந்த புகைப்படங்களும் வெளியானது.

இந்த திருமணத்திற்கு முன்பு ஒரு சிறிய வீடியோவைப் வெளியிட்டிருந்த அஞ்சு அதில் தான் பாகிஸ்தானில் "பாதுகாப்பாக உணர்கிறேன். நான் இங்கே சட்டப்பூர்வமாகவும் இங்கு வந்திருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் நான் திடீரென்று இங்கு வந்துவிடவில்லை. யோசித்துதான் வந்திருக்கிறேன். நான் இங்கே பாதுகாப்பாக இருக்கிறேன்," என்று அவர் வீடியோவில் கூறினார்.

மேலும் எனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்த வேண்டாம் என்று அனைத்து ஊடகவியலாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். அஞ்சுவுக்கு 15 வயதில் ஒரு மகளும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஞ்சு இந்தியாவிலிருந்து வாகா-அட்டாரி எல்லை வழியாக சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குச் சென்றார்.

புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, அஞ்சுவுக்கு 30 நாள் விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சான்சரிக்கு தெரிவிக்கப்பட்டது, இந்த விசா அப்பர் டிருக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஷெரிங்கலில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, ஐந்து சகோதரர்களில் இளையவர் ஆவார்.

இதனிடையே இவர்களது நட்பில் காதல் இல்லை என்றும், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஞ்சு இந்தியா திரும்புவார் என்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பிராந்தியத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியப் பெண்ணின் பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு தான் அவர் நஸ்ருல்லாவுடன் தங்க அனுமதிக்கப்பட்டார். அவர் ஒரு மாத கால விசிட் விசாவில் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். என்று அப்பர் டிர் மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) முஷ்டாக் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் காதலுக்காக புதுதில்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்துள்ள அஞ்சு, இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்" என்று முஷ்டாக் கான் தெரிவித்துள்ள நிலையில், அஞ்சுவின் கணவர் அரவிந்த், ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அவர் ஜெய்ப்பூர் செல்வதாக கூறி வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார், ஆனால் பின்னர் அவர் பாகிஸ்தானில் இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment