Tamil Nadu Ambulance Drivers drove Mizoram to deliver mizo young's remains : தெற்கிலிருந்து வடகிழக்கு வரை : 3000 மைல்கள் பயணித்த தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை வரவேற்ற மிசோரம் முதல்வர். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளால் பொதுமக்கள் இன்னல்பட்டு வருகின்றனர்.
உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் மரணங்கள் பலரையும் நொறுக்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இறந்த மிசோரம் இளைஞரின் பிரேதத்தை 3000 கி.மீ ஆம்புலன்ஸில் வைத்து, அவரின் உறவினர்களிடம் கொடுத்த தமிழக ஆம்புலன்ஸ் ட்ரைவர்களை பாராட்டியுள்ளார் மிசோரம் மாநில முதல்வர். இந்த தமிழக ட்ரைவர்களுக்கு மிசோரம் மாநிலமே நன்றிக்கடன்பட்டுள்ளது என்று ட்வீட்டில் அவர் நெகிழ்ந்துள்ளார்.
This is how #Mizoram welcomes them real life heroes!
Because we believe in humanity and nationality!#Mizoram #TamilNadu @CMOTamilNadu thank you! pic.twitter.com/GHMhMNm4tf
— Zoramthanga (@ZoramthangaCM) April 28, 2020
ஆய்ஸ்வாலின் வெறுமையான தெருக்களில் பணித்த ஆம்புலன்ஸின் வீடியோவை பதிவு செய்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆம்புலன்ஸ் வந்த போது அங்கு அக்கம் பக்கம் இருந்தவர்கள், அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்களை இருகரங்கள் தட்டி, கரவோசை எழுப்பி வரவேற்றனர்.
Against all odds!
3000 plus miles of hardship and struggles won't dampen the spirit of resting the tragic earthly remains of Vivian Remsanga by his friend Rafael AVL Malchhanhima alongwith Mr. Jeyantjiran and Chinnathambi, both from Tamil Nadu.
Mizoram salutes you!#Heroes pic.twitter.com/0RW7Z8ox05
— Zoramthanga (@ZoramthangaCM) April 28, 2020
இரண்டாவது வீடியோவில் ”மிசோரம் மக்கள் தங்களின் நன்றியை செலுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இப்படி தான் மிசோரம் உண்மையான நாயகர்களை வரவேற்கும். நாங்கள் மனித நேயத்தையும் தேச ஒற்றுமையையும் நம்புகின்றோம் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஏப்ரல் மூன்றாம் தேதி 28 வயதான விவியன் லால்ரெம்சங்கா மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வருகிறார். அவரின் பிரேதத்தை சென்னையில் புதைப்பதில் சிக்கல்கள் நிலவியதால் அவரின் உடலை அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ளனர் ஜெயேந்திரன் மற்றும் சின்னத்தம்பி. இவர்களுடன் விவியனின் நண்பர் ரஃபேலும் உடன் பயணித்தார். 3 நாட்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸில் பயணித்த அவர்கள், 84 மணி நேரம் கழித்து மிசோரமை அடைந்தனர். விவியனின் உடல் அவரின் உறவினர்களிடம் தரப்பட்டது.
மேலும் படிக்க : பொது முடக்கம் நீடிக்குமா? ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள்
இவர்களின் இந்த சேவையை உணர்ந்த மிசோ மக்கள், இந்த ஆம்புலன்ஸை கொல்கத்தா, சிலிகுரி, மற்றும் கௌஹாத்தி போன்ற நகரங்களிலும், பல்வேறு கிராமங்களிலும் வரவேற்றனர். இரண்டு ஆம்புலன்ஸ் ட்ரைவர்களுக்கும் தலா ரூ. 2000 அளித்ததோடு, ஆம்புலன்ஸாக்கான செலவையும் மிசோரம் அரசு ஏற்றுக் கொண்டது. அவர்கள் இருவருக்கும் மிசோரமின் பாரம்பரிய உடையை அன்பளிப்பாக கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் மிசோரம் மக்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.