அவிநாசி விபத்தில் பலியான டிரைவர், கண்டக்டர்: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக ஜொலித்தவர்கள்

Tamilnadu bus accident : அவிநாசி அருகே நடந்த விபத்தில் பலியான கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர், 2018ம் ஆண்டில் தனது உயிரைக்காப்பாற்றியவர்கள் என்று கேரள டாக்டர் நினைவுகூர்ந்துள்ளார்.

By: Updated: February 21, 2020, 02:37:32 PM

Vishnu Varma

அவிநாசி அருகே நடந்த விபத்தில் பலியான கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர், 2018ம் ஆண்டில் தனது உயிரைக்காப்பாற்றியவர்கள் என்று கேரள டாக்டர் நினைவுகூர்ந்துள்ளார்.

கேரள அரசு போக்குவரத்தின் வால்வோ பஸ், எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தது. பஸ் தமிழகத்தின் அவிநாசி பகுதியை, 20ம் தேதி அதிகாலை 0.3.15 அளவில் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டைமீறி தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது.. சென்டர்மீடியனையும் உடைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, எதிர்ப்புறமாக வந்த இந்த கேரள பஸ் உடன் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் டிரைவர், கிரீஷ், கண்டக்டர் பைஜூ உள்ளிட்ட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
டிரைவர் கிரீஷ் மற்றும் கண்டக்டர் பைஜூ தான், 2018ம் ஆண்டில் தான் நோயாளியாக இருந்தபோது தனது உயிரை காப்பாற்றியதாக கேரளாவை சேர்ந்த டாக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக, டாக்டர் கவிதா, இந்தியன் எக்ஸ்பிரஸ் (மலையாளம்) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 2018ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, நான் எனது மகளுடன் பெங்களூரு செல்வதற்காக, எர்ணாகுளம் – பெங்களூரு செல்லும் இந்த பஸ்சில், திருச்சூரில் எனது 2 வயது மகளுடன் ஏறினேன். தனக்கும், மகளுக்கும் உடல்நிலை சரியில்லாததால், பஸ் ஏறுவதற்கு முன்பு எதுவும் சாப்பிடவில்லை. பஸ்சிலும் ஏறிவிட்டோம். ஒருமாதிரியாக இருந்ததால், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் சென்று முறையிட்டேன். அப்போஸ் பஸ் ஓசூருக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அவர்களிடம் பேசியது மட்டும் நினைவில் உள்ளது. அதற்குபிறகு கண்விழித்து பார்த்தால் மருத்துவமனையின் பெட்டில் படுத்துள்ளேன். எனக்கு அருகில், கண்டக்டர் பைஜூ அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை. ஓய்வவெடுங்கள் என்று சிரித்த முகத்துடன் பேசினார்.

மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கான தொகையையும் கிரீஷ் மற்றும் பைஜூவும் கட்டியதை பின்னர் அறிந்துகொண்டேன். பின் எனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்துள்னளர். பெற்றோர் வரும்வரை, அவர்கள் என்கூடவே இருந்தனர். எனது சகோதர வயதில் உள்ள அவர்கள் என்னை அப்பா ஸ்தானத்தில் இருந்து இருவரும் என்னை கவனித்துக்கொண்டனர்.
அத்தையக நல்ல உள்ளம் கொண்டவர்கள், விபத்தில் இறந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். நல்ல மனிதர்களை நாம் இழந்துவிட்டோம் என்று டாக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

கிரீஷ் மற்றும் பைஜூவின் நற்செயலால், தங்களது மாநில போக்குவரத்து கழகத்திற்கு நற்பெயர் கிடைத்திருப்பதாக, கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் டோமின் ஜே தக்கங்சேரி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu bus accident driver conductor who died were heroes 2 years ago

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X