Advertisment

தமிழகத்தில் 1,400 கொரோனா பாதிப்புகளில் ஒருவருக்கு கூட தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu COVID-19 cases critical care ventilator

Tamil Nadu COVID-19 cases critical care ventilator

Arun Janardhanan

Advertisment

தமிழகத்தில் கொரோனா வைரஸின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 2,700 ஐ தாண்டியுள்ள நிலையில், தற்போது மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் 1416 நபர்களில் வென்டிலேட்டரில் ஒரு நோயாளி கூட இல்லை என்றும், சீரியஸான நிலையில் யாரும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுடன் பேசிய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், மாநில மக்கள் தொகையில் நோய்க்கான முறையைப் பற்றி ஆய்வு செய்ய மாநில அரசு ஏற்கனவே தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் (என்ஐஇ) உதவியை நாடியுள்ளது என்றார். சென்னை தவிர, நோய் பரவும் வீதமும் மிகக் குறைவு என்று ராஜேஷ் கூறினார்.

“ஆர் -0 (R-naught, reproduction number) தமிழகத்தில் 1 முதல் 2.5 வரை உள்ளது. முழு மாநிலமும் அனைத்து மாவட்டங்களும் 1 அல்லது 1 ஐ விடக் குறைவாக இருக்கும்போது, சென்னையில் அதிகரித்து வரும் பாதிப்புகள் சென்னையில் மட்டும் 2.5 வரை உள்ளன. ஆனால் சராசரியாக, ஒரு கொரோனா-பாஸிட்டிவ் தனிநபரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது" என்று அவர் மேலும் கூறினார்.

சிக்கலான பராமரிப்பு அல்லது வென்டிலேட்டர் தேவைப்படும் பாதிப்புகள் குறித்து பீலா ராஜேஷ் கூறுகையில், வெறும் ஒரு டஜன் பாதிப்புகளுக்கு  (வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 2526 வழக்குகளில்) வென்டிலேட்டர் தேவை. இதுவரை ஒருவருக்கு மட்டும் வெண்டிலேட்டர் தேவைப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை மேம்பட்டு விட்டதால், அவருக்கு நார்மல் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. நாங்கள் அறிவித்த பல மரணங்கள் (28 வெள்ளிக்கிழமை வரை) விரைவான மரணங்கள் தான். அவர்கள் வென்டிலேட்டர்களில் இல்லை. உண்மையில், வென்டிலேட்டரில் எந்தவொரு நபரும்  இறக்கவில்லை, அதே நேரத்தில் அதன் தேவை இருந்தவர்களுக்கு, 12 மணி நேரத்திற்கும் குறைவாகவே வெண்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. இது ஒரு சாதகமான அறிகுறியாக இருந்தது, ஏனெனில் பெரியவர்களாக இருந்த பல நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கியம் இருந்திருக்கலாம், ”என்று அவர் கூறினார்.

தமிழகம் அளவிலான மக்கள்தொகை கொண்ட பல மாநிலங்களை விட இங்கு மீட்பு வீதமும் (54 சதவீதம்) மற்றும் இறப்பு வீதமும் சிறப்பாக இருந்தன. 2,757 நோயாளிகளில் 1,341 பேர் மே 2 வரை சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நகரத்தில் கோவிட் -19 நிலைமையைக் கையாளும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷின் கூற்றுப்படி, சென்னையில் பதிவான "சுமார் 98%" பாதிப்புகளில் எந்த அறிகுறிகளும் இல்லை. அவரது “98%” கூற்று ஒரு பொதுவான அறிக்கையாகக் கருதப்பட்டாலும், அது உண்மை என்று பல மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

"உலகில் எந்த பகுதியில் 98% ஆக இருக்க முடியாது, ஆனால் அது சென்னையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது" என்று ஒரு மூத்த மருத்துவர் கூறினார்.

அதிக ஆபத்துள்ள பாதிப்பு நபர்கள் மற்றும் பெரியவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்போவதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆயினும், சென்னையில் திடீரென அதிகரித்த பாதிப்புகள் நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் செல்கின்றன, ஏனெனில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு ஏற்கனவே அதிகபட்ச திறனை எட்டியுள்ளன. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் கோவிட் -19 வார்டுகள் ஏற்கனவே நிரம்பியுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். "நாங்கள் இப்போது நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விடுகிறோம்." என்றார்.

கான்கிரீட் ட்ரெக்கில் மறைந்து பயணம் செய்த 18 பேர்... கைது செய்தது இந்தூர் காவல்துறை

தமிழ்நாட்டின் உறுப்பு தானம் முறையின் பின்னணியில் இருக்கும் ஒரு மூத்த vascular அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமலர்பவநாதன் ஜோசப், நாட்டின் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறார், இந்த போக்குகள் சில சுகாதாரப் பாதுகாப்பு முறைமையின் சுமையை எளிதாக்கும் என்றார்.

"ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் சுமையை குறைக்க இந்த தரவுகளைப் பயன்படுத்த முடியும். போதுமான எண்ணிக்கையிலான மருத்துவ ஊழியர்கள் இருப்பதால், நிலையான உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் நோயாளிகள் அனைவரையும் மருத்துவமனைகளுக்கு வெளியே பாதுகாப்பான தனிமைப்படுத்தும் மையங்களுக்கு எளிதாக மாற்ற முடியும். இவர்களுக்கு மருத்துவ கவனிப்பின் அடிப்படைகளை அறிந்த சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் அடிக்கடி கவனமாக கண்காணித்து வந்தால் மட்டும் போதுமானது. எனவே, critical care வசதி கொண்ட மருத்துவமனைகள் அதிக நோயாளிகளுக்கு இடமளிக்க இலவசமாக இருப்பதை உறுதிசெய்ய முடியும். அவர்களுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்று அவர் கூறினார்.

கோவிட் சிகிச்சையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவ ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோ போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து 1,000 ஆயுஷ் மருத்துவர்களை அவர்கள் ஏற்கனவே பணியில் அமர்த்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment