சபரிமலை நிலக்கல் அருகே விபத்து.. தமிழக பக்தர்கள் 64 பேர் காயம்

சபரிமலை நிலக்கல் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியதில் தமிழக பக்தர்கள் 64 பேர் காயமுற்றனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

Tamil Nadu devotees injured in bus overturn accident at Sabarimala
சபரிமலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழக பக்தர்கள் காயம் அடைந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய போது பேருந்து நிலக்கல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து செவ்வாய்கிழமை (மார்ச் 28) மதியம் 1.15 மணியளவில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 64 பேர் காயமுற்றனர். பேருந்து டிரைவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றவர்கள் பத்தனம்திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமுற்றவர்கள் எருமேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் திரும்பினர்.

11 பேர் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள் தாமதமாக வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய காயமுற்றவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் தேவசம்போர்டு அமைச்சர் கே ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் வீணா, “காயமுற்றவர்களில் 11 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினருடன் தொடர்பில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu devotees injured in bus overturn accident at sabarimala

Exit mobile version