கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தமிழகத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, மக்களவையில் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின்படி, நாட்டில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை அறியும் வகையில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் இந்த குற்றங்கள் தொடர்பான தரவுகளை வழங்கினார்.
இந்த தரவுகளின்படி, 2020 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் எஸ்சி பிரிவினருக்கு எதிரான குற்றங்களின் கீழ் பதிவு 1,274 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டில் 1,377 வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில், எஸ்சி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகாரித்ததன் விளைவாக 1,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அனைத்து மாநிலங்களிலும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் உத்தரபிரதேசம் 15,368 வழக்குகள் பதிவு செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில், கடந்த 2020-ம் ஆண்டு 12,714 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 13,146 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில், எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. 2020-ம் ஆண்டு 23 வழக்குகள் இருந்தன. அடுத்து 2021-ம் ஆண்டு 30 வழக்குகளும், 2022–ம் ஆண்டு 67 வழக்குகளாக அதிகரித்துள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்களும் மாநிலத்தில் நடந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் 116, 2021-ம் ஆண்டில் 123 மற்றும் 2022-ம் ஆண்டில் 166 எஸ்சி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் 2020-ல் 3, 2021-ல் 6 மற்றும் 2022-ல் 14 என எஸ்டி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவையில் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2020 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2020 இல் எஸ்சி பிரிவினருக்கு எதிரான குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2021-ல் 1,377 ஆக இருந்தன. 2022 ஆம் ஆண்டில், எஸ்சி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததன் விளைவாக 1,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எஸ்.சி/ எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு உடனடியாக நீதி மற்றும் மேம்பட்ட நிவாரணத்தை வழங்கவும், 2015 இல் இந்த சட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்தாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும், குறைகளைத் தீர்ப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 14566 என்ற கட்டணமில்லா எண்ணுடன் கூடிய தேசிய அட்டூழியங்களுக்கு எதிரான உதவி எண் (NHAA) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.