ஜனவரி 2020 முதல் ஜூலை 13, 2023 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தில் 155 வனவிலங்கு குற்ற வழக்குகளும், 41 வேட்டையாடுதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) தாக்கல் செய்த RTI கேள்விகளுக்கு டெல்லியிலுள்ள வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் பதிலளித்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேட்டையாடுதல், காட்டுத் தீ, அத்துமீறல்கள், வனப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைதல் மற்றும் மரம் அல்லாத வனப் பொருட்களை சேகரிப்பது போன்ற அனைத்து வழக்குகளும் இந்தத் தரவுகளில் அடங்கும்.
இதையும் படியுங்கள்: பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்: அவருடைய கிராமத்தில் இப்போது என்ன நடக்கிறது?
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் கூற்றுப்படி, இந்த புள்ளிவிவரங்கள் அந்தந்த மாநில வனத் துறைகள் மற்றும் காவல் துறைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டன.
2020, 2021, 2022 மற்றும் 2023 (ஜூலை வரை), தமிழகத்தில் 155 வனவிலங்கு குற்ற வழக்குகளும், 41 வேட்டையாடுதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் மிக அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2020 மற்றும் 2021ல் 31 மற்றும் ஆறு வேட்டையாடுதல் வழக்குகளும், 2022 மற்றும் 2023ல் தலா இரண்டு வழக்குகளும், என மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020, 2021, 2022 மற்றும் 2023 (ஜூலை வரை), கர்நாடகாவில் முறையே 25, 16, 26 மற்றும் மூன்று வனவிலங்கு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வேட்டையாடப்பட்ட வழக்கு எதுவும் கர்நாடகாவில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் முறையே 13 மற்றும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் முறையே 122 மற்றும் 15 வனவிலங்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வேட்டையாடியதாக ஆந்திரா மற்றும் கேரளாவில் முறையே 8 மற்றும் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் இதுவரை வேட்டையாடப்பட்ட வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், 2020 மற்றும் 2022 இல் தலா மூன்று வழக்குகளும், 2021 இல் இரண்டு வழக்குகளும் ஆந்திரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரளாவில், 2022 மற்றும் 2023 இல் வேட்டையாடுதல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் 2020 மற்றும் 2021 இல் முறையே 14 மற்றும் ஏழு வேட்டையாடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பெரும்பாலான வழக்குகள் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வேட்டையாடும் வழக்குகள் குறைந்துள்ளன. வேட்டையாடுதல் தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம். சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களை ஒட்டிய கிராமங்களிலும் வனத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது,” என்று பெயர் வெளியிடாத கர்நாடக வனத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
யானைகள் இறப்பிற்கு காரணமான சட்டவிரோத மின்வேலிகள் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே செவ்வாய்க்கிழமை மாநில வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விலங்குகளை விரட்ட மின் வேலிகள் அமைப்பதும் குற்றமாகும். “இந்த ஆண்டு ஒன்பது யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று அமைச்சர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.