/tamil-ie/media/media_files/uploads/2020/07/EcdE4tKWsAAvSwb.jpg)
Unlock 3 Guidelines
Bengaluru complete lockdown : கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் பெங்களூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வருதால் பெரும் அசாதாரணமான சூழல் அங்கு நிலவுகிறது. ஜூலை 14ம் தேதி இரவு 8 மணி முதல் 22ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து தங்களின் சொந்த மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். பெங்களூருவில் வாழும் தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.ஒசூர் வழியாக தான் தமிழகத்தை அடைய முடியும் என்பதால் அங்கு எல்லைப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கு மக்களின் நடமாட்டம் மற்றும் தமிழக எல்லைக்குள் வருதல் ஆகியவற்றை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நூற்றுக் கணக்கான கார்கள் எல்லையை கடக்க காத்துள்ளனர். அவர்களிடம் இ-பாஸ் பெறப்பட்டு, அதனை ஆன்லைன் மையத்தில் பதிவு செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அதே போன்று நடந்தே வரும் மக்களும் இ-பாஸ் மூலம் தங்களின் வருகையை உறுதி செய்த பிறகு நடந்தே ஒசூரை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.
ஒசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி நாள் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சோதனை சாவடியாகும். இங்கு இரவும் பகலுமாக 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.