Advertisment

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்கள்; கவர்னர்களின் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

உச்ச நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று முறை இந்த வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது - 1994-ல் கர்நாடக ஆளுநர் விவகாரத்தில்; 2016-ல் அருணாச்சலப் பிரதேச வழக்கில், 2020-ல் மத்தியப் பிரதேச விவகாரத்தில்; மிக சமீபத்தில் பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மசோதாக்களை தாமப்படுத்தியது குறித்து விசாரித்தது.

author-image
WebDesk
New Update
SC PP

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் அரசியலமைப்பு எந்திரம் தோல்வியடைந்துள்ளது என்பதைக் காட்டும் விரிவான உண்மை அடித்தளத்துடன் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. (கோப்பு புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உச்ச நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று முறை இந்த வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது - 1994-ல் கர்நாடக ஆளுநர் விவகாரத்தில்; 2016-ல் அருணாச்சலப் பிரதேச வழக்கில், 2020-ல் மத்தியப் பிரதேச விவகாரத்தில்; மிக சமீபத்தில் பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மசோதாக்களை தாமப்படுத்தியது குறித்து விசாரித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: As Governors walk out of Assemblies, what has SC said on their powers

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது வழக்கமான உரையை திடீரென முடித்துக்கொண்டு திங்கள்கிழமை சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார், ஒரு மாதத்திற்கு முன்பு கேரள ஆளுநர் முகமது ஆரிப் கானின் இதேபோன்ற நடவடிக்கை ஆளுநர்களின் அரசியலமைப்பு பங்கை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படும் சூழ்நிலைகள் உட்பட, ஆளுநரின் அரசியலமைப்புப் பங்கை விளக்கவும் தெளிவுபடுத்தவும் உச்ச நீதிமன்றத்திற்கு பல வாய்ப்புகள் உள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்/அவள் விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைத் தவிர, அமைச்சர்கள் குழுவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும் தங்களின் உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கிய பிறகே ஆளுநர் தனது பணிகளைச் செய்யக் கட்டுப்படுவார் என்று கூறுகிறது.

1994-ல் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் பங்கு குறித்து கவனம் செலுத்திய முதல் வழக்குகளில் ஒன்று, 19 எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர். பொம்மை அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, கர்நாடக ஆளுநர் பி. வெங்கடசுப்பையா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். அப்போது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. பொம்மைக்கு பெரும்பான்மை இல்லை என்றும், வேறு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் அரசியலமைப்பு எந்திரம் தோல்வியடைந்துள்ளது" என்பதைக் காட்டும் விரிவான உண்மை அடித்தளத்துடன் அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. இந்த அறிக்கை, அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஏனெனில், ஆளுநர் அவர்களின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர்.

அருணாச்சலப் பிரதேச ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா ஒருதலைப்பட்சமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்து, சபாநாயகர் நபம் ரெபியாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை 13 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி வெளிப்படுத்திய கடிதங்களைத் தொடர்ந்து 2016 -ல் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்சினை வந்தது. 

அரசியலமைப்புச் சட்டத்தின் 173வது பிரிவு ஆளுநருக்கு சட்டசபையை அழைப்பதற்கும், ஒத்திவைப்பதற்கும் (நிறுத்துவதற்கு) அல்லது கலைப்பதற்கும் அதிகாரத்தை வழங்கினாலும், அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்குப் பிறகுதான் இதைப் பயன்படுத்த முடியும் என்று நீதிமன்றம் கூறியது. அப்போது, மத்தியில் மோடி அரசு ஆட்சியில் இருந்தது.

ஏப்ரல் 2020-ல், 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த தகவலைப் பெற்ற அப்போதைய மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது சரியானதா என்பதைத் தீர்மானிக்குமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், மாநில அரசியலில் ஆளுநரின் பங்கு குறித்து எடுத்துரைத்தது. ஆளுநரின் அதிகாரம், அன்றைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஒரு அரசியல் எதிரியாகக் கருதும் ஒரு அரசியல் காலகட்டத்திற்கு உதவியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல... இந்த ஆணையை மீறிச் செயல்படுவது, அரசியலமைப்புச் சட்டத்தின் மிக மோசமான அச்சத்தை உணர்த்து. ஆளுநர் பதவியானது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைத் தடம் புரளச் செய்யக்கூடும் என்பதை அறிந்திருந்த அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இருந்தாலுகூட, மக்கள், மக்களால் மற்றும் மக்களுக்கான அரசாங்கம் அதன் காவலர்களாக செயல்பட வடிவமைக்கப்பட்டவர்களால் நிராகரிக்கப்படாது என்பதை உறுதிசெய்ய எதிர்கால சந்ததியினர் மீது நம்பிக்கை வைத்தனர் என்று கூறியது. 

கடந்த ஆண்டு நவம்பரில், பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு மற்றும் கேரள அரசும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியது.

அரசியலமைப்பின் 200 வது பிரிவின்படி, ஆளுநர் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தால், முடிந்தவரை விரைவில் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோருகிறது. மேலும், அவர் அல்லது அவள் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தாமதிக்க முடியாது என்றும் கூறியது. அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் தனது நடவடிக்கைகளை அறிவிக்க கோருகிறது ஒப்புதல் அளித்தல், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புதல் அல்லது மறுபரிசீலனைக்காக சட்டசபைக்கு மீண்டும் அனுப்பும் போது ஒப்புதலை நிறுத்திவைத்தல் குறித்து அறிவிக்க கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment