வணிக மக்கள் உழைப்போடு உடல்நலத்தை பேண வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கட்டட திறப்பு விழாவில் தமிழிசை பேச்சு

வணிக மக்கள் காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை எண்ணுவது போல கலோரிகளையும் எண்ண வேண்டும்.

வணிக மக்கள் காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை எண்ணுவது போல கலோரிகளையும் எண்ண வேண்டும்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Merchants Associations head office building

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா சென்னையில் இன்று(19.11.2023) நடைபெற்றது.

tamilisai-soundararajan | தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா சென்னையில் இன்று(19.11.2023) நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் பேசுகையில், “தொழில்துறையில் வெற்றி பெற்று சாதித்தவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். வணிக மக்கள் காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைக்கிறீர்கள்.
அதே நேரத்தில் உங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை எண்ணுவது போல கலோரிகளையும் எண்ண வேண்டும்.

பாரதப் பிரதமரின் மக்கள் மருந்தகம் இருக்கிறது. அங்கே வெளியே கடைகளைவிட குறைந்த விலையில் இருக்கும்.  அதேபோல, சாமானிய மக்களின் தினசரி சமையலுக்காக அன்றைய மூலப்பொருட்களை குறைந்த விலையில் விற்கும் திட்டத்தை நீங்கள் தொடங்க வேண்டும்.
மக்கள் மளிகைக் கடைகள் உருவாக்குவதன் மூலம் சாமானிய, எழை குடும்பங்கள் பயன் பெறுவார்கள். சாமானியர்கள் நலம் பெறுவார்கள். 

பெருந்தலைவர் காமராசர் வழி வந்தவர்களுக்கு உழைப்பு மட்டும் தான் தெரியும். நான் இரண்டு மாநிலங்களை நிர்வகிக்கிறேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது உழைப்பு மட்டும்தான்.
இந்த நாட்டில் எப்போதெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த வணிகப் பெருமக்கள் உதவு முன் வருகிறார்கள்.

Advertisment
Advertisements

இந்த மேடை மிகவும் உயர்ந்த மேடை. ஏனென்றால் இங்கே இருக்கும் அனைவரும் தங்களது வியர்வையை செல்வமாக மாற்றி இருக்கிறீர்கள்.
இதைப்போல நீங்கள் பல கட்டடங்களை திறக்க வேண்டும் என்று என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilisai Soundararajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: