Tamil Nadu move to utilise excess Cauvery water illegal says minister : காவிரி படுகையில் வெளியாகும் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று உள்த்துறை, சட்ட, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை இது குறித்து பேசிய அவர், தமிழக அரசின் முடிவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்ட வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவிரி தீர்ப்பாயம், எந்த மாநிலத்திற்கும் உபரி நீரை ஒதுக்கவில்லை. இது போன்ற சூழலில் அதிகப்படியான நீரை அவர்கள் பயன்படுத்துவது சரியானதல்ல என்று கூறினார். காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு அணைகளை இணைக்கும் திட்டத்தை அடிக்கல் நாட்டு விழா மூலம் துவங்கி வைத்தது தமிழக அரசு. 42 டி.எம்.சி. நீரை தெற்கு மாவட்டங்களுக்கு விநியோகிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
தீர்ப்பாய விதிகளின் கீழ் தமிழகம் பெறும் ஒதுக்கீட்டை விட இது அதிகமாக இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காவிரி தீர்ப்பாயம் 2007 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 419 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை 2018 இல் 404 டிஎம்சி அடியாக மாற்றியது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திறம்பட சவால் விடுமாறு மாநில அரசு சட்டக் குழுவிடம் கேட்டுள்ளது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, மாநில அரசு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழகத்திற்கு சவால் விடும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil