டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்ம சாவு : கழிவறையில் சடலம் கண்டெடுப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தமிழக மாணவர்கள் டெல்லியில் மரணம் அடைவது தொடர்கிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மருத்துவ மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தமிழக மாணவர்கள் டெல்லியில் மரணம் அடைவது தொடர்கிறது.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் எம்எஸ் படித்து வந்தார். அங்கு, இன்று காலை கழிவறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியத்தில், சரத்பிரபு தனக்குத் தானே இன்சுலின் செலுத்திக்கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதே போல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவ படிப்பில் எம்.டி., படித்த திருப்பூரை சேர்ந்த டாக்டர் சரவணனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சரத் பிரபு மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முதல் நாள் இரவில் குடும்பத்தினருடன் அவர் பேசியதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close