மேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்

West Bengal Coal Pilferage Case : நிலக்கரி மோசடி வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு அளித்த சம்மனுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

By: Updated: February 22, 2021, 06:31:36 PM

West Bengal Coal Pilferage Case : மேற்கு வங்கத்தில் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுனத்தின் ஒப்பந்தத்தில் உள்ள சுரங்கங்களில், சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனுப் லாலா என்பவர், இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமாக, அபிசேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் அனுப் லாலா லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனால் இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ருஜிராவுக்கும் அவரது சகோதரி மேனகா கம்பீர் ஆகியோருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  தற்போது இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்தள்ள ருஜிரா பானர்ஜி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நீங்கள் எனது இல்லத்தில் வந்து விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  இந்த வழக்கில்,“என்னை விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம்  எனக்குத் தெரியாது. இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், வரும் 23 ந் தேதி (நாளை)  எனது வீட்டிற்கு விசாரணைக்கு வரலாம் என்று எழுதியுள்ளார்.

இதற்கிடையே கொல்கத்தாவின் பஞ்சசாயர் பகுதியில் உள்ள மெனேகா கம்பீரின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் குழு சில வங்கி பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. இதனை தடை செய்யும் விதமாக மேறகுவங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் பாஜக தலையீடு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tamil national abhishek banerjees wife responds to cbi notice

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X