Tamil National News Update : பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடபாக வழக்கில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல்-க்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ராய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் மீண்டும் வரும் செப்டம்பர் 21 அன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் பிரபல செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் (86) உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களுக்கு எதிராக தரக்குறைவான அறிக்கைகளை வெளியிட்டதாக சர்வ் பிராமண சமாஜ் என்ற குழு புகார் அளித்த புகாரின் அடிப்படையில், சமூகத்தில் பல்வேறு சமூகத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் வகையில் கருத்து கூறியதாக அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிராமணர்களை வெளிநாட்டினர் என்றும் அவர்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த நந்தகுமார் பாகல், பிராமணர்கள் கிராமங்களுக்குள் நுழைய விட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது சொந்தக் கருத்துக்கள் தனது தந்தையிடமிருந்து மிகவும் வேறுபட்டவை என்றும், "யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளர். மேலும் தந்தையாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி சட்டத்திற்கு அப்பார்பட்டு யாரும் இல்லை. சத்தீஸ்கர் அரசாங்கம் ஒவ்வொரு மதம், பிரிவு, சமூகம் மற்றும் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறது.
எனது தந்தை நந்த் குமார் பாகல் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான கருத்து சமூக அமைதியை சீர்குலைத்துள்ளது. அவரது அறிக்கையால் நானும் வருத்தப்படுகிறேன், ” ஒரு மகனாக, நான் அவரை மதிக்கிறேன், ஆனால் முதலமைச்சராக, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியமுள்ள அவரது தவறை என்னால் மன்னிக்க முடியாது, "எங்கள் அரசியல் பார்வைகள் மற்றும் நம்பிக்கைகள் வேறுபட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே மகைது செய்யப்பட்டுள்ள நந்தகுமார் பாகல் மீது ஐபிசி பிரிவுகள் 153-ஏ (பல்வேறு சமூகத்தினரிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்) மற்றும் 505 (1) (பி) (பயம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நந்த் குமார் பாகேல் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல, ஆனால் ஒபிசி களின் உரிமைகளை கோருவதில் குரல் கொடுக்கிறார். அவர் சமூக ஊடகங்களில் தன்னை ஒபிசி மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தலைவர் என்று என்று குறிப்பட்டு வரும் அவர், உயர் சாதியினருக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். உத்தரபிரதேசத்தில் சில ஊடகங்களுக்கு ஹிந்தியில் பேசிய அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதியையும் குறிப்பிட்டுள்ளார்.
He (Chhattisgarh CM Bhupesh Baghel’s father Nand Kumar Baghel) has been sent to judicial custody. He will be presented before the court again on September 21. As per his instructions, I didn't file application for his bail today: Nand Kumar's lawyer Gajendra Sonkar in Raipur pic.twitter.com/SbwHMJ4IdM
— ANI (@ANI) September 7, 2021
முதல்வரின் தந்தையே அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.