விவசாயிகள் போராட்டம் : மரணமடைந்த விவசாயிகளின் பெயர் பட்டியலை வெளியிட்ட ராகுல்காந்தி

National Updates In Tamil : தான் தவறு செய்ததை பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். அதற்காக தேசத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார், அவர் செய்த இந்த தவறுக்கு 700 பேர் மரணமடைந்துள்ளனர்.

Congress Leader Rahul Gandhi Shares List Of Deceased Farmers : மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளான் சட்டங்களுக்கு எதிரான கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் பட்டியலை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று வெளியிட்டு்ளளார்.

மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ப, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சில நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகள் பற்றிய விபரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று வெளியிட்டார். மேலும் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனார். மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு “மனிதநேயம் இல்லாதது” “திமிர்பிடித்தது” என்று கூறிய ராகுல்காந்தி, கோவிட் -19 மரணத்திற்கு இழப்பீடு வழங்க தயாராக இல்லாத மத்திய அரசு, இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கத் தயாராக இல்லை.

இந்தியப் பிரதமர் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இது மிகவும் விரும்பத்தகாத, ஒழுக்கக்கேடான மற்றும் கோழைத்தனமான நடத்தை,” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும்  விவசாயிகள் போராட்டத்தில் சுமார் 700 பேர் இறந்ததாகக் கூறிய ராகுல், “இதில் சுமார் 403 பேருக்கு பஞ்சாப் அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளன. 152 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 100 பேரின் பெயர்கள் எங்களிடம் உள்ளது.

மேலும் 3-வதாக ஒரு பட்டியல் உள்ளது. அதில் இறந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளது. பொது தகவல்களின் அடிப்படையில், அரசாங்கம் விரும்பினால் இதனை சரிபார்க்கலாம். இறந்தவர்களின் விபரங்கள் குறித்த “பட்டியல்கள் உள்ளன, ஆனால் அவை இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இதில் மத்திய அரசின் நோக்கம் என்ன? இந்த மக்கள் போராட்டம் காரணமாக உயிரிழந்துள்ளனர். நாம் பில்லியன் டாலர்கள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பற்றி பேசவில்லை. அவர்கள் செய்த தியாகத்திற்கான குறைந்தபட்ச இழப்பீடு பற்றி பேசுகிறோம்.

தான் தவறு செய்ததை பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். அதற்காக அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் அவர் செய்த இந்த தவறுக்கு 700 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போது நீங்கள் அவர்களின் பெயர் பட்டியல் இல்லை என்று பொய் சொல்கிறீர்கள். அவர்களுக்கு வேண்டியதை கொடுக்க உங்களுக்கு ஏன் கண்ணியம் இல்லை? இந்திய அரசு இழப்பீடு வழங்கி இந்தக் குடும்பங்களுக்கு உதவ வேண்டும்..”குறைந்தபட்ச இழப்பீடு என்பது நீங்கள் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதை.

பிரதமர் அவர் ஏன் மன்னிப்பு கேட்டார்? அவர் தவறான சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்ததால், இந்த மக்கள் இறந்துள்ளனர். ஒரு பக்கம் அவர் மன்னிப்பு கேட்க, மறுபுறம் இந்த மக்கள் இல்லை என்று அரசாங்கம் மறுக்கிறது. எங்களிடம் பட்டியல் உள்ளது. பிரதமர், விரும்பினால், அவர்களை நேரடியாக அழைத்து, சரிபார்க்கலாம். அப்போது தெரிந்து கொள்வார். இந்த மக்களின் மரணத்திற்கு பஞ்சாப் அரசு பொறுப்பல்ல என்று கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கடினமான காலத்தை கடந்து செல்வதை நாங்கள் புரிந்துகொண்டதால் இழப்பீடு வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு  வேலை வழங்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அறிவிக்காதது அவர்களின் “ஆணவம். நாங்கள் ஆட்சியில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், எனவே அனைவரும் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்களிடம் மனிதாபிமானம் இல்லை. குடும்பங்கள், அவர்களின் குழந்தைகள், அவர்களின் கல்வி, அவர்களின் சுகாதாரம் பற்றி யோசித்திருந்தால் பிரதமர் ஒரு நிமிடத்தில் இதைச் செய்திருப்பார். ஆனால் அவர் தனது உருவம் மற்றும் பதவியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார் என்று கூறியுள்ளார். பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நண்பர்களான இரண்டு மூன்று பெரிய தொழிலதிபர்களுக்காக அரசாங்கம் எதையும் செய்யும் என்று குற்றம் சாட்டியுள்ள ராகுல், விவசாயிகள் என்று வரும்போது, ​​இந்த 700 பேரும் இல்லை என்று வெறுமனே மறுத்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil national congress leader rahul gandhi shares deceased farmers list on delhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express