Advertisment

இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி : ஆர்எஸ்எஸ்-சை கடுமையாக விமர்சித்த எச்.டி. குமாரசாமி

H D Kumarasamy Say About RSS : இந்தியாவில் ஹிட்லர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி : ஆர்எஸ்எஸ்-சை கடுமையாக விமர்சித்த எச்.டி. குமாரசாமி

H D Kumarasamy Say About RSS :  டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட் நிலையில், பாபர் மசூதி கட்ட தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பாபர் மசூதிக்கு தனி இடம் ஒதுக்கிய மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்கியது.

Advertisment

தற்போது இந்த பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் ராமர் கோவிலுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ராமர் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் மற்றும் கொடுக்காதவர்கள் இல்லங்களில் ஆர்.எஸ்.எஸ் தனித்தனியாக குறியீடு அமைப்பதாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமாக எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது தனது ட்விட்டர் பதிவில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் மற்றும் கொடுக்காதவர்கள் இல்லங்களில் ஆர்.எஸ்.எஸ் குறியீடு செய்து அடையாளப்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சியின் போது நாஜிக்கள் இப்படிதான் செய்தார்கள். அப்போது அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் ஜெர்மனியில் நாஜிக்கள் செய்ததை தற்போது ஆர்எஸ்எஸ் இந்தியாவில் செய்துவருகிறது. இந்த நிலை இந்திய மக்களை எங்கு கொண்டு செல்லும் என்பது குறித்து பெரும் அச்சம் ஏற்படுகிறது. ஜெர்மனியில் நாஜிக்கள் கட்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஆர்.எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களின் கொள்கை போல இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது கவலையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

நாட்டில் உள்ள மக்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் கருத்துரிமையை பறிக்கப்பட்டு வரும், இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் யாரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசின் கருத்துக்களை ஊடகங்கள் ஆதரிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ள குமாரசாமி, அடுத்து நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, குமாரசாமி கேள்விகள் பதில் சொல்வதற்கு தகுதியில்லாத கேள்விகள் என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment