உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை: ‘பண்டிகைக் கால முன் எச்சரிக்கை தேவை’

Tamil News Update : இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைகரான் பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளன

PM Modi Meet Higher Officials For Omicron Issueஇந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் வைஸ் தற்போது இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றை விட வேகமாக பரவும் திறன் கொண்ட இந்த வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில ஒமைக்ரான் வைரஸ் தொற்று 300-ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே பிரதமர் மோடி இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து உயர்மட்ட அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், கொரோனா வைரஸின் மாறுபட்ட ஓமிக்ரான் தொற்று பெரிய அச்சுறத்தலை ஏற்படுத்தியுள்ளது.  

இதன்காணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வழங்கும் கருவிகள் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுகிறதா என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் டெலி-மருந்து மற்றும் தொலைபேசி ஆலோசனைக்கு தகவல் தொழில்நுட்ப கருவிகளை திறம்பட பயன்படுத்தவும் அதை முறையாக கண்கானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இன்னும் அடுத்து வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநில அரசு விழிப்புடன் இருக்கவும், ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு, இரட்டிப்பு விகிதம் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் பாதிப்புகளின் தொகுப்புகளைக் முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில்,,எதிர்வரும் 5 மாநில சட்டசபை தேர்தலுக்குள் மாநிலத்தில் அனைவருக்கும் கொரேனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்கானிக்க வேண்டும் என்று தெரிவி்கப்பட்டுள்ளது. மேலும். ஓமிக்ரான் மற்றும் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைகரான் பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளன, இதில் 104 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி 64, தெலுங்கானா 24, கர்நாடகா 19, ராஜஸ்தான் 21 மற்றும் கேரளா 15 என பாதிப்பை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 140.24 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் கடந்த ஜனவரி 16 அன்று முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பிறகு முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil national pm modi meet higher officials for omicron issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com