ராகுல் காந்திக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அசாதாரன சூழ்நிலை நிலவி வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவும் கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகளை இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இந்த சோதனையில் என்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த  அனைவருமே, தயவுசெய்து  கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும். மேலும் மக்கள் அனைவரும், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil national update congress leader rahul gandhi tested pasitive covid

Next Story
பெரிய கூட்டங்களால் ஆபத்து: பாஜக பிரச்சார முறைகளில் மாற்றம்West Bengal Election 2021 Finally BJP cuts back in Bengal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com