மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்புகாரணமாக இந்த வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று மம்தா தனது கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் அவரின் வேண்டுகோளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வன்முறை வெடித்ததாகவும், வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாக பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை தொடர்புகொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து “கடுமையான அதிருப்தியும் கவலையும் ” வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆளுநர் தன்கர், மேற்கு வங்க வன்முறை குறித்து “பிரதமர் மோடி தனது கடுமையான வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக நான் கடுமையான கவலைகளைப் மம்தாவுடன் பகிர்ந்து கொள்கிறேன். வன்முறை காழ்ப்புணர்ச்சி, தீ விபத்து. கொள்ளை மற்றும் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன. சட்டசம் ஒழுங்கை மீட்டெடுக்க அக்கறை கொண்டவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
PM called and expressed his serious anguish and concern at alarmingly worrisome law & order situation @MamataOfficial
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 4, 2021
I share grave concerns @PMOIndia given that violence vandalism, arson. loot and killings continue unabated.
Concerned must act in overdrive to restore order.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முடிவு மே 2 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்காங்கிரஸ் கட்சி 213 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து ஆதிகாரியிடம் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் அரசியல் வன்முறைகள் வெடித்தன, இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் தங்களது தொண்டர்கள் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களது பல அலுவலகங்களைத் தாக்கி அழித்ததாகக் பாஜக தரப்பில் குற்றம் சாட்டியது. மேலும் நந்திகிராமில் சுவேந்து ஆதிகாரியின் கார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தோதலில் காங்கிரஸ்-இடது கடசிகளுடன் புதிதாக அமைந்த இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்), அதன் தொண்டர்களில் ஒருவர் பர்கானாவில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் திரிணாமுல்காங்கிரஸ் கட்சி, இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், பர்த்வானில் தங்களது கட்சியின் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.. “மாநிலத்தில் எதிர்க்கட்சி அரசியல் தொண்டர்களை குறிவைத்து நடத்திய வன்முறை” குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் கேட்டுள்ளது.
இதற்கிடையில், தாக்குதலுக்கு எதிராக மே 5 அன்று பாஜக நாடு தழுவிய தர்ணாவை அறிவித்துள்ளது. மேலும் மம்தா பானர்ஜி மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் அதே நாளில், முன்மொழியப்பட்ட ஆர்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கௌரவ் பாட்டியாவும் மேற்கு வங்கத்தில் “பரவலான வன்முறை” குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே பாஜக தேசியத் தலைவர் ஜே பி நாடா இன்று கொல்கத்தா வந்து, வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்சித் தொண்டர்களை சந்திப்பார் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. “மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாங்கள் கண்ட சம்பவங்கள் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன, எங்களை கவலையடையச் செய்கின்றன. இந்தியாவின் பிரிவினையின் போது இதுபோன்ற சம்பவங்கள் பற்றி நான் கேள்விப்பட்டேன். சுதந்திர இந்தியாவில், ஒரு கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்குப் பிறகு இதுபோன்ற சகிப்புத்தன்மையை நாங்கள் பார்த்ததில்லை, ”என்று பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil