உங்கள் வாய் குப்பை தொட்டி போல் உள்ளது. குப்பை தொட்டியை உங்களால் மிஞ்ச முடியாது என்று நடிகையும் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவை, நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகாபாபு விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, சமீபத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி குறித்தும், பவன்கல்யாணின் சகோதரரும் நடிகருமான சிரஞ்சீவி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ரோஜாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சிரஞ்சீவி பவன்கல்யான் ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்டிஆர் எந்த நிலையில் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யவே முதல்வர் ஆனார்கள். ஆனால் அந்த குடுபம்பத்தில் இருந்து வந்த யாரும் சொந்த மாவட்டத்தில் தங்களின் உயர்வுக்கு காரணமாகவர்களை கூட உயர்ந்த நிலைக்கு கொண்டுவர உதவவில்லை. அவர்கள் பல ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் தான் எங்கு போட்டியிட்டாலும் தோல்வியை சந்திக்கிறார்கள் என்று ரோஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதனிடையே சிரஞ்சீவி பவன்கல்யான் ஆகியோரின் சகோதரரான நாகாபாபு தற்போது அமைச்சர் ரோஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குப்பை தொட்டீ போல் பேசாதீர்கள் உங்களுக்கும் குப்பை தொட்டிக்கும் வித்தியாசமே இல்லை. முதலில் அமைச்சர் என்ற முறையில் உங்களது பொறுப்புகளை சரியாக செய்யுங்கள். என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் ரோஜா தலைமையிலான ஆந்திரா சுற்றுலாத்துறை இந்தியாவில் உள்ள முதல் 20 சுற்றுலாத்துறைகளில் 18-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கேரளா, அசாம் குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். அமைச்சர் ரோஜா தனது பொறுப்பை மறந்து செயல்பட்டதால்தான் ஆந்திரா சுற்றுலாத்துறை 18-வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஆந்திர சுற்றுலாத்துறையில் மறைமுகமாகவும் நேரடியாகவும், சில ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை கொண்டிருந்தனர். தற்போது ஒய.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது.
நீங்கள் பைத்தியம் போல் பேசினால் அவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அமைச்சர் என்றால் நீங்கள் சுற்றுலா செல்வது அல்ல. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது. முதலில் பொறுப்புகளை தெரிந்துகொள்ளுங்கள். எனது சகோதரர்கள் சிரஞ்சீவி பவன் கல்யான் குறித்து இவ்வளவு நாட்கள் நீங்கள் இழிவாக பேசியிருந்தாலும், என் சகோதரர்களுக்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன். என்னை பற்றி பேசுங்கள். ஆனால் என் தலைவர் பவன் கல்யான் என் மூத்த சகோதரர் சிரஞ்சீவி குறித்து பேசும்போதும் நான் அமைதியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.
உங்கள் வாய்க்கும் முனிசிபால் குப்பை தொட்டிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தான் முக்கிய காரணம். குப்பை தொட்டியை போல் அசையாமல் இருக்காமல் சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பற்றி யோசியுங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/