சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்கதர்கள் கூட்டம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மார்கழி கடைசி நாளான இன்று மகரஜோதி தெரிந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
தென்னிந்தியாவில் கடவுளின் தேசமாக அழைக்கப்படும் கேரளாவில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி இறுதிவரை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்படும். கோவில் திறக்கப்படுவது முதல் இறுதிவரை பக்கதர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி இருக்கும்.

தமிழில் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து கொண்டு பக்தர்கள் சபரிமலை நோக்கி செல்வார்கள். கேரளா மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநில பக்தர்களுடன் வட இந்தியாவில் இருந்து அதிகமாக பக்தர்கள் சபரிமலையில் வந்து ஐயப்பன் கோவிலை தரிசித்து செல்வார்கள்.

தற்போது ஜனவரி மாதம் நடுப்பகுதி வந்துவிட்ட நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்தடுத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரிமலையின் முக்கிய நிகழ்வான மகரஜோதி விழா இன்று நடைபெற்றது. மாலையில் தெரிந்த இந்த மகரஜோதி விளக்கை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலின் மூலவர் விக்கிரகத்தில் அணிவிக்கி திருவாபரணம், பந்தள அரண்மனையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு இன்று மாலை சரங்குத்தி வந்தடைந்தது. அதன்பிறகு மாலை 6.35 மணிக்கு மூலவருக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதணை நடத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது.
#sabarimala | #makarajothi சபரிமலை மகரஜோதி pic.twitter.com/W1f133y63P
— Indian Express Tamil (@IeTamil) January 14, 2023
ஜோதி தரிசனத்திற்காக ஏராளமாக பக்தர்கள் சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களில் கூடினர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையில் குவிக்கப்பட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 1765 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சபரிமலை மகர ஜோதி விழா தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/