மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
ராகுல் வாழ்த்து
காங்கிரஸ் மூத்த தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல் எனக் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:30 (IST) 15 Aug 2023நூஹ் வன்முறை: பஜ்ரங் தள உறுப்பினர் ஃபரிதாபாத்தில் கைது
பிட்டு பஜ்ரங்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல், ஒரு பொது ஊழியரை தனது கடமைகளைச் செய்வதிலிருந்து தானாக முன்வந்து தீங்கு விளைவித்தல், கலவரம் செய்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 25 ஆகியவை அடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜூலை 31 அன்று நடந்த மத யாத்திரையின் போது மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, பிட்டு பஜ்ரங்கி என்று அழைக்கப்படும் பஜ்ரங் தள் உறுப்பினர் ராஜ் குமார், நூஹ் போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பஜ்ரங்கியை நூஹ் காவல்துறையின் சிஐஏ குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை அவரது ஃபரிதாபாத் வீட்டில் இருந்து கைது செய்ததாக ஃபரிதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
- 22:25 (IST) 15 Aug 2023இளைஞர்களை போதைப்பொருளிலிருந்து மணிப்பூர் பாதுகாத்து வருகிறது - மனீப்பூர் முதல்வர் பிரேன் சிங்
சுதந்திர தின விழாவில் கொடியேற்றியபோது மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் உரை: “நாட்டின் இளைஞர்களை போதைப்பொருளிலிருந்து மணிப்பூர் பாதுகாத்து வருகிறது. 2017-ம் ஆண்டு முதல், பா.ஜ.க அரசு மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டு மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
- 21:29 (IST) 15 Aug 2023ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அருகே விநாயகர் கோயில் பூசாரி ஜெ.தீபா மீது போலீசில் புகார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலின் பூசாரியான ஹரிஹரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
20 ஆண்டுகளாக பூஜை நடத்தி வரும் என்னிடம் தீபா, மற்றும் அவர் கணவர் என்னை பூஜை செய்ய விடாமல் மிரட்டி வருவதாக ஹரிஹரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
- 21:03 (IST) 15 Aug 2023தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கரூர் 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 20:21 (IST) 15 Aug 2023சாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனி உளவுப்பிரிவை அமைக்க வேண்டும் - திருமாவளவன்
நெல்லை நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பின் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு: “சாதிய, மதவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனியாக ஒரு உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்; நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலை தரும் என நம்புகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
- 19:57 (IST) 15 Aug 2023அட்டரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி
77வது சுதந்திர தினம்: பஞ்சாப் மாநிலத்தின் அட்டரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர் .
- 19:39 (IST) 15 Aug 2023தடுப்பணையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த ஜீவா மற்றும் மனோகரன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன .
- 19:13 (IST) 15 Aug 2023அண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாட்டில் எடுபடாது: தொல். திருமாவளவன்
அண்ணாமலையின் நடை பயணம் தமிழ்நாட்டில் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்
- 19:01 (IST) 15 Aug 2023புல்லூர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு
புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த ஜீவா மற்றும் மனோகரன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது
- 18:54 (IST) 15 Aug 2023இந்தியா vs ஆஸ்திரேலியா உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி தொடக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா vs ஆஸ்திரேலியா உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்குகிறது
- 18:40 (IST) 15 Aug 2023நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தில் சிறப்பு காட்சிகள் வெளியீடு
நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ள சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு 41 வினாடிகள் கொண்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரோல்டு தாஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ள கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது
- 18:17 (IST) 15 Aug 2023இந்தியாவின் சுதந்திர தினம்; இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்
- 17:54 (IST) 15 Aug 2023பிந்தேஷ்வர் பதக் மரணம்; மோடி இரங்கல்
சுலப் இன்டர்நேஷனல் நிறுவனரும் சமூக ஆர்வலருமான பிந்தேஷ்வர் பதக் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.
எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிந்தேஷ்வர் பதக்கிற்கு மார்பில் வலி ஏற்பட்டதாகவும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது மதியம் 1.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் பிந்தேஷ்வர் பதக்கின் மறைவு "தேசத்திற்கு ஒரு ஆழமான இழப்பு" என்று கூறினார்.
- 17:30 (IST) 15 Aug 2023FIFA மகளிர் உலகக் கோப்பை; இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஸ்பெயின் அணி சாதனை
FIFA மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஸ்பெயின் அணி சாதனை படைத்துள்ளது
- 17:12 (IST) 15 Aug 2023ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- 16:34 (IST) 15 Aug 202377வது சுதந்திர தினம்; தமிழக அரசு சார்பில் 19 கைதிகளுக்கு விடுதலை
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 19 கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை அளவில் 66 சதவீதத்தை அனுபவித்த 19 கைதிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. புழல் - 10, கடலூர் - 4, திருச்சி - 3, வேலூர் - 2 என 19 சிறைவாசிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
- 16:27 (IST) 15 Aug 202311% கட்டணம் வசூலிக்கும் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை ஐகோர்ட்
சொத்துக்களை ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதன் விற்பனைச் சான்றிதழை பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்ய கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்கில், ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11% கட்டணம் வசூலிக்கும் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நிர்பந்திக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் விற்பனைச் சான்றை பதிவு செய்ய 11 % கட்டணம் வசூலிக்க அரசு அரசாணை விற்பனைச் சான்றிதழ்களை கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6% வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 14:32 (IST) 15 Aug 2023இ.பி.எஸ் அறிக்கைக்கு அமைச்சர் மா.சு பதில்
"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையை பார்க்கும் போது, இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார் என தோன்றுகிறது. கேரளாவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் தினந்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
ஒரு சின்ன விசயத்தை சரியாக பார்க்கும் தன்மை எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. விளையாட்டுத்துறை பயிற்சியாளர் என என்னை விமர்சித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி" என்று இ.பி.எஸ் அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
- 14:31 (IST) 15 Aug 20234 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
"தமிழ்நாட்டில் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:11 (IST) 15 Aug 2023வைகை எக்ஸ்பிரசுக்கு வயது 46!
சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை முன்னிட்டு லோகோ பைலட்களுக்கு மரியாதை செய்து, கேக் வெட்டி கொண்டாடினர் ரயில் பயணிகள்.
இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட 1977ம் ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கிமீ வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு
1999ம் ஆண்டு மீட்டர் கேஜில் இருந்து ப்ராடு கேஜ் பாதைக்கு மாற்றப்பட்ட ரயில் 2014ம் ஆண்டு வரை டீசல் எஞ்சினில் இயக்கப்பட்டு வந்தது. 2014ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் எஞ்சினில் வைகை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது
- 13:47 (IST) 15 Aug 2023டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஹசரங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான வனித்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- 12:59 (IST) 15 Aug 2023மு.க.ஸ்டாலின் ட்வீட்
"சமூக விடுதலையை அடையாமல், சட்டத்தால் வழங்கப்படும் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை - டாக்டர் அம்பேதகர்;
மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என 9 ஆண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றுவோம்;
அன்பும், வேற்றுமைகளை மதிக்கும் பண்பும், அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலைநாளில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
- 12:59 (IST) 15 Aug 2023கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி
தற்போது வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை வேண்டாம், போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும்; கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது;
மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்க முடியும்; உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள்; தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி
- 12:55 (IST) 15 Aug 2023‘LEO' அப்டேட்
‘LEO' படத்தில் ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று மாலை 5 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது!
- 12:37 (IST) 15 Aug 2023போதுமான மழை பெய்தால் தண்ணீர் திறக்கப்படும் - டி.கே.சிவக்குமார்
கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட முடியுமோ, அவ்வளவு திறக்க உத்தரவு தற்போது வறட்சி காலம், இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை வேண்டாம் போதுமான மழை பெய்தால் தண்ணீர் திறக்கப்படும் - டி.கே.சிவக்குமார்
- 12:22 (IST) 15 Aug 2023தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு தங்கம் ஒரு கிராம் ரூ.5,500க்கும், ஒரு சவரன் ரூ. 44,000க்கும் விற்பனை
- 12:21 (IST) 15 Aug 2023சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு
சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு - ரூ.50 லட்சம் பரிசு, 2வது இடம் தாம்பரம் - ரூ.30 லட்சம் பரிசு
- 11:55 (IST) 15 Aug 2023சிறந்த நகராட்சிக்கான முதல் இடம் ராமேஸ்வரம்
சிறந்த நகராட்சிக்கான முதல் இடம் ராமேஸ்வரம் - ரூ.20 லட்சம் பரிசு, 2வது இடம் திருத்துறைப்பூண்டி - ரூ.10 லட்சம் பரிசு, 3வது இடம் மன்னார்குடி - ரூ. 6 லட்சம் பரிசு
- 11:54 (IST) 15 Aug 2023மாற்று திறனாளிகளுக்காக பணிபுரிந்த மருத்துவர் ஜெயக்குமாருக்கு விருது
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது . கல்வி ஆராய்ச்சிக்கான அப்துல்கலாம் விருது - வசந்தா கந்தசாமி, கல்பனா சாவ்லா விருது - முத்தமிழ் செல்வி சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் தேரணி ராஜனுக்கு நல்லாளுமை விருது கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு நல்லாளுமை விருது மாற்று திறனாளிகளுக்காக பணிபுரிந்த மருத்துவர் ஜெயக்குமாருக்கு விருது
- 11:28 (IST) 15 Aug 2023ரூ. 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் - முதல்வர் திட்டங்களின் செயல்பாடு குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறேன்
- 10:44 (IST) 15 Aug 2023இனி விடியல் பயண திட்டம் என்று அழைக்கப்படும்
மகளிருக்கான இலவச பயண திட்டம் இனி விடியல் பயண திட்டம் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிட முடியும் நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 10:44 (IST) 15 Aug 2023வரும் காலங்களில் இந்தியாவை பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவேன்
வரும் காலங்களில் இந்தியாவை பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவேன் வீடற்ற ஏழை மக்கள், நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை நினைவாக்கி வருகிறோம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது - பிரதமர் மோடி
- 10:43 (IST) 15 Aug 2023மாநில பட்டியலில் கல்வி இணைக்கப்பட வேண்டும்
சுமார் 2 லட்சம் உயிர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மாநில பட்டியலில் கல்வி இணைக்கப்பட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் போன்ற கொடூர தேர்வை அகற்ற முடியும் - முதல்வர்
- 10:21 (IST) 15 Aug 2023ஏற்ற தாழ்வற்ற அரசை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம் - முதல்வர்
இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம இந்தியா சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்ற தாழ்வற்ற அரசை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம் - முதல்வர்
- 10:20 (IST) 15 Aug 2023இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 சேமிக்க முடிகிறது
ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது - முதல்வர் உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது .. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 சேமிக்க முடிகிறது - முதல்வர்
- 10:19 (IST) 15 Aug 2023குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கிறது - பிரதமர் மோடி
ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது . மக்கள் மருந்தகங்கள் மூலம் மூத்த குடிமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கிறது - பிரதமர் மோடி
- 10:18 (IST) 15 Aug 2023மணிப்பூரில் அமைதி நிலவத் தொடங்கியுள்ளது
தற்போது மணிப்பூரில் அமைதி நிலவத் தொடங்கியுள்ளது மணிப்பூரில் தொடர்ந்து அமைதி நீடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது தொடர்ந்து அமைதி நீடிக்க மக்கள் மற்றும் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்- மோடி
- 10:17 (IST) 15 Aug 2023உலக நாடுகளை விட இந்தியாவில் அதிகமான பெண் விமானிகள் உள்ளன
உலக நாடுகளை விட இந்தியாவில் அதிகமான பெண் விமானிகள் உள்ளன. பெண்களை தலைமையாகக் கொண்ட வளர்ச்சி இந்தியாவை மாற்றி வருகிறது. சந்திரயான் திட்டத்தில் கூட பெண் விஞ்ஞானிகள் தலைமை வகிக்கின்றன" "இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் அறிவியல், பொறியியல் படிக்கின்றனர். வேளாண் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு பயிற்சி அளிப்போம்" "பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறோம் - மோடி
- 09:59 (IST) 15 Aug 2023தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்வு
தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 09:38 (IST) 15 Aug 2023டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் அறிந்து கொள்ள விரும்புகிறது
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் அறிந்து கொள்ள விரும்புகிறது. நவீனத்துவத்தை நோக்கி நாடு முன்னேறி கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமை உலகை வழிநடத்தும்
வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல், சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் வளர்ச்சி உள்ளது - பிரதமர் மோடி
- 09:34 (IST) 15 Aug 2023கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஸ்டாலின்
77வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்
- 09:03 (IST) 15 Aug 2023இந்தியா இப்போது விஸ்வாமித்ரா
தனது தலைமையிலான அரசாங்கம் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்றும், நாடு இப்போது 'விஸ்வாமித்ரா' (உலகின் நண்பன்) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
- 08:40 (IST) 15 Aug 2023உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா இருக்கும்
பிரதமர் மோடி சுதந்திர தின உரை நேரலை: 'அடுத்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்- பிரதமர் மோடி
நாட்டில் வறுமை குறையும் போது நடுத்தர வர்க்கத்தினரின் பலம் கணிசமாக அதிகரிக்கிறது என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில், உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்-பிரதமர் மோடி
- 08:38 (IST) 15 Aug 2023உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா
அடுத்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
நாட்டில் வறுமை குறையும் போது நடுத்தர வர்க்கத்தினரின் பலம் கணிசமாக அதிகரிக்கிறது என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில், உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்- மோடி
- 08:35 (IST) 15 Aug 2023விஸ்வகர்மா யோஜனா திட்டம்
முடி திருத்துபவர்கள், தங்கம் செய்பவர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் கூறினார்
- 08:11 (IST) 15 Aug 2023மணிப்பூரில் அமைதி திரும்பி வருகிறது
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அங்கு அமைதி திரும்பி வருகிறது. அமைதியின் மூலமாக மட்டுமே மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
- 08:08 (IST) 15 Aug 2023மணிப்பூர் மக்களுடன் நாடு துணை நிற்கிறது- மோடி
ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது; அமைதியின் மூலமாக மட்டுமே அங்கு தீர்வு காண முடியும்; ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை.
- 08:07 (IST) 15 Aug 2023பிரதமர் மோடி உரை
டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
- 08:05 (IST) 15 Aug 2023செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய மோடி
77வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.