scorecardresearch

பிரதமர் மோடி, ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை : உக்ரைன் அமைதிக்கு ஆதரவு தர கோரிக்கை

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடி, ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை : உக்ரைன் அமைதிக்கு ஆதரவு தர கோரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்து ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக நடத்தி வரும் நிலையில்,  உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இந்த தாக்குதலின் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

மேலும் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருவதால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நேற்று (டிசம்பர் 26) இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் கடந்த வாரம் தனது அமெரிக்க பயணத்தின் போது முன்மொழிந்த 10 அம்ச “அமைதி சூத்திரம்” குறித்து இந்தியாவின் ஆதரவைக் கோரியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடிக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நடக்கும் நான்காவது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். வெற்றிகரமான ஜி-20 கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். வாழ்த்தினேன். நான் அறிவித்த சமாதான சூத்திரத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவும் பங்களிப்பும்  கிடைக்கும் நம்புகிறேன். ஐ.நா.வில் மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் திரும்பப் பெறுதல், கைதிகளை விடுவித்தல், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பது மற்றும் அணுசக்தி பாதுகாப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் ஆகியவற்றை குறித்து உக்ரைன் அதிபரின் அமைதி சூத்திரம் உள்ளது.

மேலும் போர் தொடங்கியது முதல் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுக்கு இந்திய சார்பில் மொத்தம் 99.3 டன் மனிதாபிமான உதவிகளுடன் மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், தார்பாய், மருத்துவ உபகரணங்கள் என 12 சரக்குகளை வழங்கியுள்ளது.

இதனிடையே உக்ரைன் அதிபரின் தொலைபேசி அழைப்பை உறுதி செய்துள்ள  பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.

“எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உறுதி செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் “ஜி20 தலைவர் பதவி ஏற்றுள்ள இந்தியாவுக்கு உக்ரைன் அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

இந்நிலையில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளில் வளரும் நாடுகளின் கவலைகளுக்கு குரல் கொடுப்பது உட்பட, இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முக்கிய முன்னுரிமைகளை பிரதமர் விளக்கினார்” மேலும், “இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யுமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மோடியுடன் பேசி உக்ரைன் மற்றும் இந்தியா-ரஷ்யா இருதரப்பு உறவுகளின் நிலைமை குறித்து விவாதித்த 10 நாட்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.

எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய பகுதிகள் உட்பட இருதரப்பு உறவின் பல அம்சங்களை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாக இந்தியா கூறியிருந்தாலும், ரஷ்ய அறிக்கையில் “பாதுகாப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. “பரஸ்பர முதலீடு, எரிசக்தி, விவசாயம், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்” ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடந்த எஸ்சிஓ உச்சி மாநாட்டில் மோடியும் புதினும் கடைசியாக சந்தித்தனர். அந்த நேரத்தில், மோடி புடினிடம் இது “போரின் சகாப்தம் அல்ல” என்று கூறினார் இந்த உரையாடல்கள் 10 மாத கால ரஷ்யா-உக்ரைன் மோதலின் பின்னணியில் வந்துள்ளன, இதில் இரு தரப்புக்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்றாலும், புச்சா படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது மற்றும் ரஷ்ய தலைவர்கள் வெளியிட்ட அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கு எதிரான பல தீர்மானங்களில் வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகி உள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மோடியும், ஜெலென்ஸ்கியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது பற்றி, அக்டோபர் 4 அன்று அவர்களின் கடைசி உரையாடலில், உக்ரைன் மோதலுக்கு இராணுவ தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று மோடி உக்ரைன் அதிபரிடம் கூறினார். இரு தலைவர்களும் தங்கள் கடைசி சந்திப்பை நவம்பர் 2021 இல் கிளாஸ்கோவில் COP-26 இன் ஓரத்தில் நடத்தினர்.

இந்த ஆண்டு நவம்பரில், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகள், அணுசக்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tamil news zelenskky dials pm modi wishes new delhi successful g20 presidency

Best of Express