Advertisment

ஈஸ்டர் சன்டே... கிறிஸ்துவர்களை சந்தித்த கேரள பாஜக : சி.பி.எம், காங்கிரஸ் எச்சரிக்கை

பாஜகவின் இந்த முயற்சி முக்கிய கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே என்று கூறியுள்ள எதிர்கட்சிகள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.

author-image
WebDesk
New Update
Kerala BJp

கேரளா பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்துவர்களுடன் சந்திப்பு

ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியது.

Advertisment

பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் நரேந்திர மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சமூக வலைதளங்களில், பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் இரண்டு பிஷப்களை சந்தித்தார், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கண்ணூரில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லாகுட்டி, மூத்த தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் உடன் தலச்சேரி பேராயர் ஜோசப் பாம்ப்ளனியை சந்தித்தார்.

பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மதக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வலுவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் நல்லாட்சியின் பலன்களை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் பார்த்து வருவதாக, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இதேபோன்ற மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஈஸ்டர் நாளில், கேரளாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த கிறிஸ்தவக் குழுவான கத்தோலிக்கர்கள் மட்டுமே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபையானது "லவ் ஜிஹாத்" க்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தது, இது கத்தோலிக்க திருச்சபையையும் சங்க பரிவாரத்தையும் சமீபத்திய வெளிப்பாட்டிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நெருக்கமாக கொண்டு வந்தது.

இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பாசெலியோஸ் மார்தோமா மேத்யூஸ், பாஜகவின் கிறிஸ்தவப் பணியை மறுத்துள்ளார். “ஈஸ்டர் தின வருகையால் பாஜக மீதான கிறிஸ்தவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நாட்டில் தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது, பாஜக அதைக் கண்டுகொள்ளவில்லை. இது அந்தத் தாக்குதல்களை கட்சி அமைதியாக ஆதரித்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அடுத்த லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு சங்பரிவாரின் பரப்புரைத் திட்டம், வடக்கில் உள்ள தேவாலயங்கள் மீதான இந்து வலதுசாரிகளின் தாக்குதல் சம்பவங்களைத் தூண்டிய ஆளும் சிபிஐ (எம்) (CPI(M) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் இந்தியாவிற்கு உள் நாட்டு அச்சுறுத்தல்களாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. தற்போது சிறுபான்மையினரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் முயற்சி சிரிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் “கடந்த கிறிஸ்துமஸின் போது, நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பரவலான தாக்குதல்களை எதிர்கொண்டனர். வட இந்தியாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக முடிவடையாத நேரத்தில் கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். அறிவொளி பெற்ற கேரள மக்கள் பாஜகவின் அணுகுமுறையை உணர்ந்து கொள்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சங்பரிவாரின் அரசியலின் ஆபத்துக்களை உணர்ந்து பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியதாக சிபிஐ(எம்) கூறியது. “பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்திய மிரட்டல் மற்றும் தூண்டுதல், இப்போது கிறிஸ்தவப் பிரிவினரை அதன் மடியில் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்களின் பிஷப்புகளுடனான சந்திப்பு அதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அக்கட்சி கூறியது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், பிஜேபி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனால் சிறுபான்மை சமூகத்தின் மீதான அதன் "புதிய காதல்" அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். “நூற்றுக்கணக்கான தேவாலயங்களில் வழிபாட்டை பாஜக சீர்குலைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் சங்க பரிவார் அமைப்புகள் ஏராளமான தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளன.

சங்பரிவார் தாக்குதலில் இருந்து பாதுகாப்புக் கோரி, பல கிறிஸ்தவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் கேரளாவில் கிறிஸ்தவ இல்லங்களுக்குச் செல்கின்றனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வலையில் சிக்க மாட்டார்கள். கேரளாவில் பாஜக மிகப்பெரிய இந்துத்துவா பிரச்சாரத்தை நடத்தியது, ஆனால் மாநிலத்தில் 90% இந்துக்கள் அதற்கு எதிராக உள்ளனர், ”என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment