பிரதமரின் பாதுகாப்பு மீறல்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

Tamil National Update : பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு்ளளது.

National Update In Tamil : பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 5-ந் தேதி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

திட்டமிட்டபடி பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி விழா நடைபெறும் இடத்திற்கு ஹலிகாப்டரில் செல்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு காரில் செல்ல திட்டமிட்டார். இதன்படி காரில் புறப்பட்ட பிரதமர் மோடி பெரோஸ்பூர் பகுதியில் ஒரு மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டார். அங்கு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமர் மோடி அங்கிருந்து செல்ல முடியவில்லை.

20 நிமிடங்கள் காத்திருந்த அவர், அதன்பிறகு விழாவை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். இந்த விகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் காஙகிரஸ் அரசுக்கு எதிரான பாஜக தலைவர்கள் கடுயான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், பஞ்சாப் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் கூறி வருகினறனர்.

இதனால் பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நிகழ்வு நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு்ளளது.  பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிககள் குறித்து உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணை குழுவில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு உதவ என்ஐஏ-வின் டைரக்டர் ஜெனரலால் பரிந்துரைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும்  தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் இடம்பெறவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அதற்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ள நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.,, ப்ளூ புக் படி, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அவரும் பொறுப்பு என்பதால், அவர் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டு்ளளது. மேலும் இந்த குழுவில, பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் டி.எஸ்.பட்வாலியா, உளவுத்துறை ஏடிஜிபி சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,, விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தில் தங்கள் தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil prime miniter narendra modi security breach supreme court probe panel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com