புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து கார்னிவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. சாலையோர கலை நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Advertisment
சாலையோர கலை நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா குதிரை வண்டி ஓட்டி துவக்கி வைத்தார். கார்னிவெல் நிகழ்ச்சி இன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான சாலை கலை நிகழ்ச்சி நடைபெற்றது இது காரைக்கால் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது.
Advertisment
Advertisements
இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,நடனம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விவசாய சார்ந்த பொருட்களை காட்சிபடுத்தி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், சாலை கண்காட்சியில் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக குழுக்களாக சென்று காட்சிப்படுத்தினர் மேலும் மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி சென்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளும் கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மேலும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பதகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அது மட்டுமின்றி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா குதிரை வண்டி ஓட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“