தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யர் பிறந்த தினம் இன்று. பிப்ரவரி மாதம் 19,1855 ம் ஆண்டு அவர் பிறந்தார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் 'தமிழ்த் தாத்தா' என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் 90-இக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
இந்நாளில் அவரை நினைவுக்கூரும் வகையில், தமிழ் அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சியில் நடைபெறுவது வழக்கம். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஜயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
அந்த பதிவில், "தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.
இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil