Advertisment

வேளான் சட்டங்கள் ரத்து : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Tamil National Update : வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
வேளான் சட்டங்கள் ரத்து : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Tamil Repeal Three Farm Laws : விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் 3 வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வேளான் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 3 வேளான் சட்டங்களை அமல்படுத்துவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் இந்த சட்டம் குறித்து தங்களது அதிருப்தியை வெளிபப்டுத்திய விவசாயிகள், நாடு முழுவதும் பல இடங்களில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். இதில் பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். இதற்கு இடையில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த போதும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தினர்.

இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்த நிலையில்,திடீரென கடந்த வாரம் சர்ச்சைக்குரிய 3 வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மட்டுமல்லாது பல தரப்பினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்த சிறப்பான வெற்றி என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் விவசாயிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்கொண்டனர்.

இந்நிலையில் வேளான் சட்டம் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்த 5 நாட்களுக்கு பிறகு வேளான் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இன்று  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வேளான்  ​​சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்." "வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வது எங்கள் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை நான்கு மாதங்களுக்கு - டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை - நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் இதன் கீழ் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு மாதமும் கோதுமை அல்லது அரிசி போன்ற உணவு தானியங்களை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் கூறிய அவர், "மார்ச் 2020 இல் தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்" அடுத்த நான்கு மாதங்களில் இத்திட்டத்திற்காக ரூ.53,344 கோடி செலவாகும்” என்றும் அவர் கூறினார்.

மேலும் பிஎம்ஜிகேஏஒய் ("PMGKAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகளுக்கு மேல் வழங்கப்படும்" இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில், கொரோனா தொற்றுநோய்களின் போது எந்தக் குடும்பமும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கத்தின் கவனம் இருந்தது. “உலகில் 80 கோடி மக்களுக்கு மாதக்கணக்கில் உணவு தானியங்களை வழங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

இதுவரை 600 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 541 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நான்கு மாத கால நீட்டிப்பு உட்பட மொத்தம் ரூ.2.60 லட்சம் கோடி செலவாகும்” என்று தாக்கூர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Against Farm Laws Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment