இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீருக்கு கொரோனா மருந்துகளை பயன்படுத்த உரிமம் உள்ளதாக என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீரால் கொரோனா மருந்துகளை விநியோகிக்கவும், அவற்றை அதிக அளவில் வாங்கவும் எப்படி முடிகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இவை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லவா? இந்த மருந்துகளை ஒருவர் பெரிய அளவில் எப்படி வாங்க முடியும்? இந்த மருந்துகளை கையாள்வதற்கான உரிமத்தை அவர் வைத்திருக்கிறாரா? இந்த மருந்தை பயன்படுத்த உரிமம் தேவையில்லையா என்ன? என்று நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிரிவு கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கைக்குப் பிறகு அது நிறுத்தப்படும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது இன்னும் தொடர்கிறது, ”என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடாபாக டெல்லி அரசின் மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கூறுகையில், நீதிமன்ற அறிக்கைகு பின்னரும் அது நடக்கிறது என்றால் "மிகவும் பொறுப்பற்ற செயல்" என்று கூறியுள்ளார். முன்னதாக வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி" "ஃபேபிஃப்லு" இந்த மருந்துகளை விநியோகிப்பதாக அவரது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
ஆனால் அத்தியாவசிய கொரோனா மருந்துகள் கிடைக்காதது தொடர்பான வழக்கை விசாரித்தபோது, "அவர் அந்த மருந்துகளை அவர் எங்கிருந்து பெறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் தொற்றுநோய் தொடர்பான வழக்குகளின் விசாரணையின் போது கிழக்கு டெல்லியில் தனது அங்கத்தினர்களுக்கு மட்டுமே இலவச கோவிட் -19 மருந்துகளை வழங்குவதற்கான கம்பீரின் முடிவின் மீதான வழக்கு குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள வழக்கறிஞர் மல்ஹோத்ரா, “இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர் நல்ல வேலையை தான் செய்கிறார் என்றாலும், மற்ற பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு கொரோனா மருந்து கிடைக்காத நிலையில், கிழக்கு டெல்லி நோயாளிகளுக்கு மட்டும் மருந்து கிடைக்கிறது என்றால் அது நிச்சயம் பிரச்சினைதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil