உத்திரகாண்டின் உத்தர்காசி பகுதியில், சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்த நிலையில், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளரை மீட்க குறைந்தது 4-5 நிமிடங்கள் என்று கணக்கிடப்பட்டு, சுமார் 400 மணி நேரத்திற்கு பின் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : Uttarakhand tunnel rescue operation | The dig: 400 hrs, dozen agencies, Govts on ground, in the backroom
இந்த மீட்பு பணிகளுக்காக, மாநிலம் மற்றும் மத்திய அரசை சேர்ந்த ஒரு டஜன் ஏஜென்சிகள், பேக்ரூம் மற்றும் கிரவுண்ட் இடையே வழக்கமான ஒருங்கிணைப்பு, மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். 17 நாட்கள் நீடித்த மீட்புப் பணியில் சுமார் 652-க்கு அதிகமான அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் காவல் துறையைச் சேர்ந்த 189, சுகாதாரத் துறையைச் சேர்ந்த 106, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறையைச் சேர்ந்த 77, தேசிய பேரிடர் மீட்புப் படையிலிருந்து 62, மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து 39, ஜல் சன்ஸ்தான் உத்தர்காஷியிலிருந்து 46, மின்சாரத் துறையைச் சேர்ந்த 32 பேர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பிலிருந்து 38 பேர் என பலர் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.
இது குறித்து பிரதம மந்திரி அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகரும், உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியுமான பாஸ்கர் குல்பே கூறுகையில், சுதந்திரமான தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை ஒருவரை சேர்த்தால், இந்த மீட்பு பணிகளுக்கு பங்களித்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டும் என்று தெரிவித்துள்ளார். .
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், கடந்த 2018 தாய்லாந்து குகை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உட்பட, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாத்தியமான ஒவ்வொரு நிபுணரையும் இந்த மீட்பு பணிகள் தொடர்பாக அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இணை ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/hgHYhUStosjPq5SNrc8I.jpg)
மீட்பு குழு அதிகாரிகளின் கூற்றுப்படி, சுரங்கப்பாதையின் வாசலில் இருந்து தோண்டுவது ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது என்று தெரிந்ததால், மீட்புப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் ஐந்து திட்டங்களை செயல்படுத்தினர். இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஏஜென்சிகளால் கையாளப்பட்டன, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு திறன்களை கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
என்.டி.ஆர்.எஃப் (NDRF), எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF),பி.ஆர்.ஓ (BRO) தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், நவயுகா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட், அகழியில்லா பொறியியல் பணிகள், அத்துடன் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல துறைகள் இந்த மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பி.டி.எஸ்.டி (PTSD) ஒரு கவலை
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சோர்வு, நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தவிர, மிகப்பெரிய கவலை பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவு (PTSD) ஆகும். இது வரும் நாட்களில் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் மீட்பு பணிகளில், பெயரிடப்படாத எண்ணற்ற மாவீரர்கள் இருந்தனர். 24 மணி நேரமும் காவலில் நின்ற காவல் துறையினர்; மீட்பவர்களுக்கு வழக்கமான உணவை தயாரித்த சமையல்காரர்கள்; உபகரணங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக கூடுதல் நேரம் வேலை செய்த ஓட்டுநர்கள். அனைவருக்கும் ஓய்வெடுக்கவும், ஓய்வெடுக்க இடம் இருப்பதை உறுதிசெய்ய, அந்த இடத்தில் நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். துணை செயலாளர் மங்கேஷ் கில்டியால் முதல் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா வரை ஒவ்வொருவரும் தங்களை இந்த மீட்பு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கிடைத்துள்ள ஒரு ஆதாரத்தின்படி: "இந்த தளத்தில் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுடனும் ஒரு ஒருங்கிணைப்பு கூட்டம் நவம்பர் 20 அன்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு மணிநேர அடிப்படையில் தனிப்பட்ட முறையில் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டனர்." இந்தக் கூட்டத்தில்தான் நாடு முழுவதிலும் இருந்து உத்தர்காசிக்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பசுமை வழித்தடத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“