இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கேரளாவுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் கேரளா அரசின் சில்வர்லைன் திட்டம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் சார்பில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை பிரதமுர் மோடி பல மாநிலங்களில் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கேரளாவுக்கான வந்தே பாரத் ரயில் சமீபத்தில் கேரளா சென்றடைந்தது.
இந்த ரயிலுக்கு கேரளா பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், ஆளும் கட்சி சார்பில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை குறித்து எவ்வித செயல்பாடும் இல்லை. கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வந்தே பாரத் ரயில் மாநிலத்திற்கு வந்தபோது இது தொடர்பாக எவிவித செயல்பாடுகளிலும் ஈடுபடாதது ஆச்சரியமாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதன்மையான அதிவேக ரயில் முயற்சி அடுத்ததாக கேரளாவிற்கு வரும் என்று செய்தி வந்த சில நாட்களில் இது போன்ற ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் முதல் ரயில் சேவை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வந்தே பாரத் கேரளாவுக்குள் நுழைந்தது. இந்த ரயில் வரும் வழியில் பல நிறுத்தங்களில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வந்தே பாரத் ரயில் மாநிலத்திற்கு பிரதமரின் பரிசு என்றும், கேரளாவின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்புக்கு உதாரணம் என்றும் கூறினர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் பாஜக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் அவர்கள் புதிய முயற்சியாக சிறுபான்மையினரின் நன்மதிப்பை பெறுவதற்காக ஈஸ்டர் மற்றும் ஈத் பண்டிகைகளில் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே கேரளாவில் எல்.டி.எப். எல்.டி.எஃப் அரசாங்கத்தின் சொந்த திட்டமாக அதிவேக சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக வந்தே பாரத் தனது பயணத்தை தொடங்க உள்ளது.
வந்தே பாரத் – சில்வர்லைன் என்ற இந்த இரண்டு திட்டங்களும் மாநிலங்களுக்கு இடையேயானவை. இதில் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இடையே வந்தே பாரத் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் ரேக்குகள் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் வந்தடைந்தபோது, பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான வி முரளீதரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ஆனால் வந்தே பாரத் ரேக்குகளின் வருகையின் போது கேரளாவில் ஆளும் அரசாங்கத்தை ஏன் மதிக்கவில்லை என்று இடதுசாரிகள் கேட்டுள்ளனர். உண்மையில், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், மாநிலத்தில் ரயில்வே துறையை வைத்திருக்கும் கேரள அமைச்சர் வி அப்துரஹிமான், மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்று கூறினார்.
இதனிடையே வந்தே பாரதத்தையும் கேரளாவின் உரிமையாக வரவேற்பதாக கூறிய சிபிஐ(எம்)ன் இளைஞர் அமைப்பான டிஒய்எஃப்ஐயின் மாநிலச் செயலாளர் வி கே சனோஜ், இதை பாஜக அதை ஒரு மெகா நிகழ்வாகவும், மத்திய பாஜக அரசின் முடிவாகவும் முன்னிறுத்தியது. "நவீன ரயில் சேவை ஒதுக்கீடு மகிழ்ச்சிக்குரிய விஷயம், ஆனால் அது மாநிலத்தின் ரயில் பயண துயரங்களுக்கு எந்த நிவாரணத்தையும் அளிக்காது. மாநிலத்தின் வளைந்து நெளிந்து கிடக்கும் ரயில் தண்டவாளங்களைக் கருத்தில் கொண்டு, அதிவேக ரயில்களை இங்கு இயக்க முடியாது. எனவே, வந்தே பாரத் உட்பட எந்த ரயிலையும் தற்போதுள்ள தண்டவாளத்தில் குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்க முடியும். "இணை ரயில் அமைப்பு (சில்வர்லைன்) அமைக்கப்படும் வரை இது அப்படியே இருக்கும் என்று கூறியுளளார். அதேபோல் இடதுசாரித் தலைவர்களும் சில்வர்லைன் வந்தே பாரதை விட மலிவு விலையில் இருக்கும் என்று பரிந்துரைத்தனர்.
இதனிடையே கேரளாவில் வந்தே பாரத் சேவைக்கு எதிராக இடதுசாரிகள் பிரச்சாரம் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் குற்றம் சாட்டினார். “வந்தே பாரத் ஒருபோதும் கேரளாவுக்கு வராது என்று முதலமைச்சரும் மற்ற தலைவர்களும் கூறி வந்தனர். இது பாஜகவின் அரசியல் வளர்ச்சியை பற்றியது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது மாநிலத்தை பெரும் கடன் வலையில் தள்ளும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சில்வர்லைன் திட்டம் நடக்காது என்பது உறுதியாகிவிட்டது. வந்தே பாரதத்தின் வருகை சில்வர்லைனின் முடிவை அறிவித்தது, அது மிகப்பெரிய ஊழலையும் கண்டிருக்கும். அதனால்தான் டிஒய்எஃப்ஐ (DYFI) தலைவர்கள் வந்தே பாரத் சேவைக்கு எதிராக உள்ளனர்’’ என்று சுரேந்திரன் கூறினார்.
டெல்லி-ஜெய்ப்பூர்-அஜ்மீர் வழித்தடத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்த பிறகு, இப்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil