Advertisment

நோயாளிகள், உறவினர்கள் மீது கோபம் கொள்ளக் கூடாது; மருத்துவ மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை

மருத்துவர்கள் நோயாளிகளின் மீதும் அவர்களது உறவினர்கள் மீதும் கோபம் கொள்ளக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்

author-image
WebDesk
New Update
ட்ட

மருத்துவ மாணவர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை

மருத்துவர்கள் நோயாளிகளின் மீதும் அவர்களது உறவினர்கள் மீதும் கோபம் கொள்ளக் கூடாது. சில நேரங்களில் எரிச்சல் ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தாலும் பொறுமையாக கையாள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்

Advertisment

மருத்துவர்கள் நோயாளிகளின் மீதும் அவர்களது உறவினர்கள் மீதும் கோபம் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் இயலாமையின் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் சூழலில் நம்மை சில நேரங்களில் எரிச்சல் ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தாலும் பொறுமையாக அதனைக் கையாள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஏக

அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 % இடஒதுக்கீட்டின்கீழ் புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள மாணவர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று(28-09-2023) நடைபெற்றது.  துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் மருத்துவப் புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கி மாணவர்களைச் சிறப்பித்தார்.

ஆஅஃப்ஃபெ

தலைமைச் செயலர்  ராஜீவ் வர்மா, சுகாதாரததுறைச் செயலர்  முத்தம்மா, துணைநிலை ஆளுநரின் செயலர்  அபிஜித் விஜய் சௌதரி, உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் குமார் ஷர்மா, சுகாதாரத்துறை சார்புச் செயலர் திரு கந்தன், இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, கல்வித்துறை இணை இயக்குநர்  சிவகாமி, மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆடெக்

மருத்துவக் கல்வியில் சேர இடம் கிடைத்த மாணவர்களும் அவர்களது பெற்றோரும் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தமது மகிச்சியைப் பகிர்ந்து கொண்டனர். தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா மற்றும் சுகாதாரத்துறைச் செயலர் முத்தம்மா இருவரும் அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவிகளுக்கு வந்த தமது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதோடு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது:

ட்ட்ட்ட

*மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக பெற்று நாம் சாதனை படைத்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

*ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நெருக்கடி நேரத்திலும் இந்த 10% இட ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்கு மிக குறுகிய காலத்திலேயே பதில் கிடைத்தது. 

ஃபா

சென்டாக் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக கிடைக்கப்பெற்றால் இந்த வருடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் இடஒதுக்கீடு கிடைக்க முடியாதபடி எழுதியிருந்ததால், அதனை மறுபடியும் மத்திய அரசுக்கு எழுத வேண்டிய நிலை இருந்தது. தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் புதுச்சேரியில் 10 % நாம் கேட்பதற்கான விளக்கமும் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

அட

*மத்திய உள்துறை அமைச்சர்,  மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு நன்றிகளை நாம் தெரிவித்துக் கொள்வோம். அதனோடு புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, துணைநிலை ஆளுநரின் செயலர்  அபிஜித் விஜய் சௌதரி மற்றும் சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் இதற்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

*இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது பற்றி சொன்னவுடன் முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுத்தார். அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு உடனடியாக இந்த கோரிக்கை அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பப்பட்ட நாள் முதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நொடி வரை ஒவ்வொரு மணி நேரமும் அதனை நமது குழு கண்காணித்து வந்தது. மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு பயன்பட வேண்டும் என்று பலமுறை இறைவனை வேண்டிக் கொண்டேன். இந்த 10% இட ஒதுக்கிட்டு பெறுவதற்கு அனைவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பதை தெரிவிக்கவே இதனைத் தெரிவிக்கிறேன். 

ஆகட்

*அரசு பள்ளியல் பயிலும் மாணவர்கள் 10 % இட ஒதுக்கீட்டை எதிர்ப்பார்த்து இருக்காமல் இனி வரும் காலங்களில் நீட் தேர்வில் பொதுப் பிரிவிலேயே முன்னிலையில் வரும் அளவிற்கு உழைத்து முன்னேற வேண்டும். நீங்கள் முயற்சி செய்து மட்டுமே மருத்துவ இடத்தைப் பெற முடியும் என்று நம்பிக்கையோடு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இருந்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு அரசும்  உறுதுணையாக இருக்கும்.

*நீங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கே பொருளாதார ரீதியாக பலதரப்பட்ட மாணவர்களை சந்திக்க கூடும். அதனைக் கண்டு மனம் துவளக் கூடாது. மதிப்பெண்களை அதிகம் பெறுவதன் மூலமாக நீங்கள் உயர வேண்டும். அதற்கு மிகவும் உறுதியாகவும் நீங்கள் இருக்க வேண்டும். முன்பு கல்லூரிகளில் ‘ராகிங்’ பழக்கம் மாணவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்தது. இப்பொழுது அவை களையப்பட்டு மாணவர்களின் படிப்பிற்கு உறுதுணையாக அனைத்து நிர்வாகமும் இருக்கிறது. எப்பொழுதும் உங்களுக்குள் இருக்கும் குரலை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

ஆட

*மருத்துவக் கல்வி பயிலும் ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவப் புத்தகங்கள் கிடைக்காமல் சிரமம் கொள்ளக்கூடாது என்பதற்காக மருத்துவம் சார்ந்த புத்தகங்களை என் சொந்த செலவில் உங்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் சில தருணங்கள் மிகவும் உன்னதமான தருணமாக இருக்கும். அதில் ஒன்றாக இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன். சாமானியர்கள் மருத்துவர்களாக மாறக்கூடிய இத்தகைய ஒரு பயணத்தில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

*உயிருக்கு போராடும் ஒரு மனிதரை காப்பாற்றும்போது ஒரு மருத்துவராக பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். நான் அரசியல்வாதியாக மாறியதற்கு மருத்துவராக இருந்ததுதான் காரணம். நான் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது “லதா“ என்கிற ஒரு பெண் தன்னை எரித்துக் கொண்டு மிக தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்துகொண்டிருக்கும்போது “ஏன் இவ்வாறு செய்தீர்கள்” என்று கேட்டேன். “வரதட்சணை பிரச்சனையால் ஏற்கனவே ஏற்பட்டிருந்த இழப்புகளை சரி செய்ய முடியாத சூழலில், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இத்தகைய முடிவை எடுத்தேன்” என்று கூறினார். “உங்களைப் போன்ற ஒருவரை நான் முன்பே சந்தித்து இருந்தால் நிச்சயம் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.

*தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. உடனடியாக அதை துறை அதிகாரியிடம் சென்று அனைவருக்கும் வேண்டிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறு கேட்டேன். முதலில் என்னை பெரிதும் பொருட்படுத்தாத அவர், என் தந்தை பெரிய அரசியல்வாதியாக இருந்ததை அறிந்த அவர் உடனடியாக நான் கேட்ட அடிப்படை வசதிகளை செய்தார். அப்பொழுது மக்களுக்கு உதவ வேண்டும் என்றால்கூட அதிகாரத்தில் நாம் இருக்க வேண்டும் என்கிற புரிதல் எனக்கு வந்தது. அது என்னை மக்களுக்கு உதவ அதிகாரத்தை பெற வேண்டும் என்கிற நிலையை நோக்கி பயணம் செய்ய திருப்புமுனையாக இருந்தது. இப்பொழுது நான் அதிகாரத்தில் இருக்கிறேன்; மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு வருகிறேன். என் குடும்பத்தில் அனைவரும் மருத்துவராக மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களை விட ஆளுநராக சிறந்த சேவைகளை மக்களுக்கு செய்து கொண்டு வருவதில் மகிழ்ச்சி.

*அரசு மருத்துவமனைகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். மருத்துவர்கள் நோயாளிகளின் மீதும் அவர்களது உறவினர்கள் மீதும் கோபம் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் இயலாமையின் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் சூழலில் நம்மை சில நேரங்களில் எரிச்சல் ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தாலும் பொறுமையாக அதனைக் கையாள வேண்டும்.

*உங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை வாழ்க்கையில் எப்போதும் மறக்கக்கூடாது. மருத்துவக் கல்லூரியில் சேரும் பொழுது உங்களுக்கு நிறைய பழக்கங்கள்,  அறிமுகங்கள் ஏற்படும். அவைகள் சில நேரங்களில் தவறாக இருப்பின் அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டும். மருத்துவராக ஆனதும் சம்பாதியுங்கள்; ஆனால் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டாம்.

*இத்தகைய 10 % இட ஒதுக்கீட்டிற்கு முக்கிய காரணமாக இருந்த மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம். இங்கே வந்து தங்களது பார்வைகளை பகிர்ந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் கூறிய கோரிக்கைகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment