தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஆளுநர் மாளிகையில் பழங்குடிய நலவாரிய அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, கோயா மற்றும் லம்பாடா பழங்குடிய கலாச்சாக் குழுக்களை ஆளுனர் மாளிகைக்கு வரவழைத்து அவர்களோடு நடனமாடி மகிழ்ந்தார். இந்த வீடியோவை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழிசை சௌந்தராஜன் ஆடிய கொம்மு கோயா நடனம்:
தெலுங்கானாவில், கோயா மக்கள் மிகவும் தொன்மையான பழங்குடி மக்கள். இந்த மக்கள் காலம், காலமாக தமிழிசை சௌந்தரராஜன் ஆடிய இந்த கொம்மு கோயா நடனத்தை பாதுகாத்து வருகின்றனர். மழை வருவதற்காகவும், நிலம் செழிப்பதரற்க்காகவும், கோயா மக்கள் பூமி பாண்டகா விழாக் கொண்டாடுவது வழக்கம். அந்த நிகழ்சிக்காக பிரத்தியோகமாக ஆடப்படும் நடனம் தான் இந்த கொம்மு கோயா நடனமாகும்.
மேலும், தெலுங்கான மாநிலத்தில் பழங்குடிய மக்கள் அதிகம் வாழும் முலுகு மாவட்டத்தில் பழங்குடி பல்கலைக்கழகம் கொண்டுவருவதற்காக மத்திய அரசிடம் பேசி வருவதாக தகவல் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் மறுசீரமைப்பு சட்டம் 2014 ன் கீழ் பழங்குடி பலகலைக்கழகம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.