Advertisment

நீண்ட கால பா.ஜ.க தலைவர், மோடி பற்றி புத்தகம் எழுதியவர்... ராஜ்பவனில் இருந்து தேர்தலில் குதிக்கும் தமிழிசை

நீண்ட காலம் பா.ஜ.க தலைவராகவும், மோடியை பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுதியவருமான தமிழிசை சௌந்தரராஜன், ராஜ்பவனில் இருந்து தமிழக தேர்தல் களத்திற்கு மாறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Tamilisai Modi

2011-ம் ஆண்டு அகமதாபாத்தில் சத்பவனா யாத்திரை மேடையில், நரேந்திர மோடியை 'அடுத்த பிரதமர்' என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார். (பி.டி.ஐ புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீண்ட காலம் பா.ஜ.க தலைவராகவும், மோடியை பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுதியவருமான தமிழிசை சௌந்தரராஜன், ராஜ்பவனில் இருந்து தமிழக தேர்தல் களத்திற்கு மாறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Long-time BJP leader, author of memoir around Modi, Tamilisai Soundararajan seems set for move from Raj Bhavan to TN poll ring

தேர்தல் அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தும் வகையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 2024 லோக்சபா தேர்தலில் அவர் பெரும்பாலும் நகர்ப்புற தென் சென்னை தொகுதியில் போட்டியிடலாம் என்ற பா.ஜ.க தலைமையின் நம்பகமான பேச்சுகளுக்கு மத்தியில், அவர் தனது ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்ததாக அவரது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியது.



பா.ஜ.க அவரைத் தேர்வு செய்தால், அதன் பாரம்பரிய இந்து வாக்குவங்கிக்காக அதே இடத்தைப் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற மூன்று தலைவர்களின் குரல்கள் கவனிக்கப்படாமல் போகும்.

தமிழ்நடு காங்கிரசின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்ப அரசியல் பாதையில் இருந்து விலகி, பத்தாண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வுடனான தனது அரசியல் வாழ்க்கையில், தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமான தேர்தல் மற்றும் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். இருப்பினும், 2014-ல் அவர் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டது - அமித்ஷாவின்  “இந்தி மையப்பகுதிக்கு வெளியே கட்சியின் அடித்தளத்தை வளர்ப்பது” என்ற நோக்கத்துடன் - பலரை ஆச்சரியப்படுத்தியது.

மாநிலத்தில் உள்ள மற்ற பா.ஜ.க தலைவர்களைவிட தமிழிசை சௌந்தரராஜனுக்கு இருந்த தனித்துவமான சிறப்பு, அவர் உயர்மட்ட தலைமைக்கு அருகாமையில் இருந்ததாக நம்பப்படுகிறது. 2011-ம் ஆண்டு அகமதாபாத்தில் சத்பவனா யாத்திரையின் மேடையில் இருந்து நரேந்திர மோடியை  ‘அடுத்த பிரதமர்’ என்று குறிப்பிட்டார். மறைந்த தமிழ் சினிமா நட்சத்திரம் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன் மோடியை அவர் ஒப்பிட்டுப் பேசியது அப்போதைய குஜராத் முதல்வருக்கு பிடித்துப்போனதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழிசை சௌந்தரராஜன், மோடியுடனான தனது சந்திப்புகளைப் பற்றி நரேந்திர மோடி மற்றும் மறக்கமுடியாத சுவைமிகு தேநீர் துளிகள் என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்தை எழுதினார்.

2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு தி.மு.க.வின் கனிமொழியிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அவர் செப்டம்பர் 2019-ல் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 2009 லோக்சபா தேர்தலிலோ அல்லது 2006, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலோ அவரது தோல்விகள் அனைத்தும் கடுமையான போட்டிகளாக இருந்தன, அப்போது, தமிழகத்தில் பா.ஜ.க ஒரு சிறிய போட்டி கட்சியாக மட்டுமே இருந்தது.

தெலங்கானா ஆளுநராக அவர் பதவியேற்றதற்கு நடுவில், கிரண்பேடிக்குப் பதிலாக 2021 பிப்ரவரியில், அவருக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தனது அமைதியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அரசியலில் மோதலற்ற அணுகுமுறைக்காகவும் அறியப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன், மோடி அரசாங்கத்தின் கீழ் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள மற்ற ஆளுநர்களைப் போலவே தெலங்கானா ராஜ் பவனில் சர்ச்சைகளில் தனது பங்கைக் கொண்டிருந்தார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், கே. சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) தலைமையிலான முன்னாள் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) அரசாங்கத்திற்கும் இடையேயான பதட்டங்கள் செப்டம்பர் மற்றும் நவம்பர் 2022-க்கு இடையில், குறிப்பாக நெறிமுறை மற்றும் அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக அதிகரித்தது. செப்டம்பர் 2022-ல், பி.ஆர்.எஸ் அரசாங்கம் தனது அலுவலகத்தை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுப்பது மற்றும் அவரது வருகைகளின் போது அதிகாரப்பூர்வ வரவேற்புகள் இல்லாதது போன்ற சம்பவங்களை முன்னிலைப்படுத்தினார்.

தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா 2022-ஐ அவர் கையாண்டது - அவர் கையொப்பமிடுவதை தாமதப்படுத்தியது - மேலும் மாநில கல்வி அதிகாரிகளின் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.

குடிமக்களின் குறைகளை நேரடியாக நிவர்த்தி செய்ய அவர் ‘பிரஜா தர்பார்’ நடத்தத் தொடங்கியபோது, ​​ இந்த மோதல் தீவிரமடைந்தது. இது அரசியல் சார்புடையது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தும் முயற்சிகள் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியபோது, நியமனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் தொடர்பான சர்ச்சைகளுடன் பிரச்னை உச்சத்தை எட்டியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dr Tamilisai Sounderrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment