/tamil-ie/media/media_files/uploads/2019/09/Tamilisai-swearing-final.jpg)
Tamilisai Soundararajan Swearing, Telangana Governor Tamilisai Soundararajan,தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவியேற்பு, குமரி அனந்தன், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு, Congress Leader Kumari Ananthan, Tamilisai Soundararajan, Tamil Nadu Deputy CM O.Panneerselvam participated, Tamil Nadu Ministers participated
Tamilisai Soundararajan Swearing as Telangana Governor: தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெலங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை கடந்தவாரம் மத்திய அரசு தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்க ஐதராபாத் சென்றார். பேகும்பேட் விமான நிலையத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் சவுகான், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் தமிழிசை தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றார். பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பதவியேற்புக்குப் பின் தமிழிசை சௌந்தரராஜன் அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.