புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 561 செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து உணவு மளிகை எரிவாயு உட்பட 2021- 22ல் ரூ.90.86 லட்சமும், 2022- 23-ல் ரூபாய் 54.19 லட்சமும், 2023 - 24-ல் ரூ.91.59 லட்சமும் செலவாகி உள்ளது.
துணைநிலை ஆளுநர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2021- 22-ல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக ரூபாய் 30.71 லட்சமும் 2022-23-ல் ரூபாய் 21.19 லட்சமும் 2023 -24 ரூபாய் 10.95 லட்சமும் செலவாகி உள்ளது.
முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு வந்த பரிசு பொருட்கள் குறித்து தகவல் இச்செயலகத்தில் இல்லை. அவரின் விமான செலவுக்கு இந்தச் செயலகம் ரூபாய் 21,324 செலவு செய்துள்ளது. அவரின் பிற விமான பயணங்களில் செலவுகளை தெலுங்கானா மாநில அரசு ஏற்றுள்ளது. மொத்தமாக கடந்த 2021- 22-ல் ரூபாய் ஒரு கோடியே 21 லட்சமும், 2022-23-ல் ரூபாய் 75 லட்சத்து 38 ஆயிரம், 2023- 24-ல் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“