இந்தியா முழுவதும் கொரானா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கடந்த வருகிறது. இதில்பலி எண்ணிக்கையம் கனிசமான உயர்ந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதில் தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையினால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் சிக்கி பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் மரணமடைந்துள்ளனர். இதனால் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்றால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவியாக 5 லட்சம் காப்பீடு செய்யப்பட்டு அந்த குழந்தைக்கு 18 வயது முடியும்போது வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையில் பிரமர் அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று பாதிப்பினால், தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதியுதவிஅவர்கள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், 23 வயதை அடைந்ததும் பிஎம் கேரில் இருந்து ரூ10 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் அந்த குழந்தைகள் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும், தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும், புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil