Advertisment

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான தமிழக சொத்துக்களை விற்க தடை: ஆந்திர அரசு உத்தரவு

Today news updates : திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை ஏலம் விடும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News in Tamil Live Updates

News in Tamil Live Updates

Today news updates : திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை ஏலம் விடும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில், நேற்றிலிருந்து இன்று வரை 6767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,38,845ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 77,103 ஆகும். இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து இது வரை 57,720  பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2657 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில், குணமடையும் சதவீதம் 41.28 சதவீதமாக உள்ளது. கொரோனா உயிரழப்பு எண்ணிக்கை 4021 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது : Guidelines for international arrivals

உள்நாட்டுப் பயணத்துக்கும் (விமான/ரயில்/மாநிலங்களுக்கிடையேயான பேருந்துப் பயணம்) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது : Guidelines for domestic travel (air/train/inter-state bus travel)

கோவிட்-19 மேலாண்மை முயற்சிகள் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Latest Updates: கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்த செய்திகள் அனைத்து இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.














Highlights

    22:32 (IST)25 May 2020

    சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

    டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுததலை குறிக்கும் வகையில் அவரது கையில் முத்திரையிடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் இருநது மதுரைக்கு அதிகாலை செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்ல வேண்டிய பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    22:12 (IST)25 May 2020

    தேவஸ்தான சொத்துகளை விற்கக்கூடாது

    ’திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு’

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவு

    * பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிருந்தது

    21:54 (IST)25 May 2020

    வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தான் மாநிலத்தில் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசம்

    பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் மாநிலத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு அதிக அளவிலான பயிர்கள் நாசமாயின. இதேபோல் தற்போது மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குள் வெட்டுக்கிளிகள் நுழைந்தாலும், ராஜஸ்தான் மாநிலம்தான் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

    இந்த வெட்டுக்கிளிகளால் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகி உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில்தான் அதிகம் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

    மாநிலம் முழுவதும் வெட்டுக்கிளிகளை அகற்றுவதில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண் துறை சார்பில் ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    21:38 (IST)25 May 2020

    தாய் மண் திரும்பும் மக்கள்

    பர்மிங்காமில் இருந்து அம்ரிஸ்டர் செல்ல புறப்படவிருக்கும் ஏர் இந்தியா விமானத்தில் சொந்த நாடு கிளம்ப தயாராக காத்திருக்கும் இந்தியர்கள். 

    21:34 (IST)25 May 2020

    ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

    ‘தமிழக அரசு உத்தரவு - ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு’

    மீன்பிடிக்கச் செல்ல தயாராகாத நிலையில் தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளதாக கூறி மீனவர்கள் எதிர்ப்பு

    * இன்று நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்

    21:18 (IST)25 May 2020

    அபுதாபிக்கு விமானம்

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.25 மணிக்கு அபுதாபிக்கு விமானம் இயக்கப்படுகிறது

    * நாளை காலை 9.25 மணியளவில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபி செல்கிறது

    21:17 (IST)25 May 2020

    கொரோனாவால் பேரிழப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்?

    கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா தவறவிட்டவைகள் ஏராளம். ஜனவரி 20 ம் தேதி தென் கொரியாவில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்த நாள் ஜனவரி 21 அன்று அமெரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்படுகிறது. அடுத்த நான்கு நாட்களில் தென் கொரியா நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கான கருவிகளை அனுப்பிவைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 12 நாட்கள் கழித்துதான் பரிசோதனை முறைக்கும் கருவிகளுக்குமான அனுமதி கிடைக்கிறது .

    பிற நாடுகளுக்கு போக வேண்டிய மருத்துவ கருவிகள் அமெரிக்க பர்ஸ்ட் என்ற முழக்கத்துடன் இடைமறித்து வாங்கப்படுகினறன.கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தை பயன்படுத்துவது என முடிவெடுக்காமல் தாமதமாக்கியது சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியது. தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்தது, சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது, சீனா மற்றும் இத்தாலியில் கிடைத்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது போன்ற காரணங்களால் இன்று அமெரிக்கா பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

    20:49 (IST)25 May 2020

    பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52,667

    மகாராஷ்டிராவில் இன்று மேலும் 60 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; 2,436 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது

    * இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52,667 ஆக அதிகரித்துள்ளது

    * 1,695 பேர் உயிரிழந்த நிலையில் 15,786 பேர் குணமடைந்தனர்

    20:32 (IST)25 May 2020

    பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பினார் ஓ.பி.எஸ்

    ‘மருத்துவ பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பினார் ஓ.பி.எஸ்’

    சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

    * மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்

    20:11 (IST)25 May 2020

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி மனு

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    20:10 (IST)25 May 2020

    கோயம்பேடுக்கு அடுத்து திருமழிசையா ? - காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி

    திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படுவதால், கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப் பகுதியாக திருமழிசை சந்தை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகளை இறக்கி வைக்க போதிய இடவசதி இல்லாததால், அன்றைய தினமே காய்கறிகளை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விற்க முடியாத காய்கறிகள் டன் கணக்கில் குப்பைத்தொட்டியில் வீசி எறியப்படுகின்றன. கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப்பகுதியாக திருமழிசை சந்தை மாறுவதற்குள், விரைந்து பணிகளை முடித்து கோயம்பேடு சந்தையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    19:49 (IST)25 May 2020

    மாநில அரசு மோசமாக தோல்வி

    ’கொரோனா: மாநில அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது’

    நகராட்சி, அரசாங்க மருத்துவமனைகளை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு நான் ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளேன்

    பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பதை நாங்கள் பார்க்கிறோம்

    - முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்

    19:31 (IST)25 May 2020

    பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு

    தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், தாம் மருந்து உற்பத்தி துறையின் அமைச்சராக உள்ள நிலையில், முறையாக மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். முறையாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்காத நிலையில், நோயாளிகளுக்கு எப்படி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் சதானந்த கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

    19:03 (IST)25 May 2020

    சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு

    ’தமிழகத்தில் 1,044 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு’

    தமிழகத்தில் இதுவரை 12 வயதிற்குட்பட்ட 1,044 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    18:43 (IST)25 May 2020

    குணமடைந்தவர்கள் நிலவரம்

    (25.05.2020) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குணமடைந்தவர்கள் நிலவரம்

    18:27 (IST)25 May 2020

    உயிரிழப்பு 118 ஆக அதிகரிப்பு

    ’தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 118 ஆக அதிகரிப்பு’

    தமிழகத்தில் இதுவரை 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
    ; இன்று மட்டும் 7 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    18:26 (IST)25 May 2020

    4,21,480 மாதிரிகள் பரிசோதனை

    தமிழகத்தில் இதுவரை 4,21,480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 8,731 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; இன்று மட்டும் 407 பேர் டிஸ்சார்ஜ்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    18:12 (IST)25 May 2020

    சென்னையில் 549 பேருக்கு கொரோனா

    'சென்னையில் 11 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு'

    சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    * சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரிப்பு

    18:09 (IST)25 May 2020

    805 பேருக்கு கொரோனா பாதிப்பு

    'தமிழகத்தில் 17 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு'

    தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    * தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,277 இல் இருந்து 17,082 ஆக அதிகரிப்பு

    17:50 (IST)25 May 2020

    93 பேருக்கு கொரோனா

    ’கர்நாடகாவில் மேலும் 93 பேருக்கு கொரோனா’

    கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது; இன்று மட்டும் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்

    - கர்நாடக சுகாதாரத்துறை

    *கர்நாடகா கொரோனாவுக்கு தற்போது 1,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    17:49 (IST)25 May 2020

    சிங்கம்பட்டி ஜமீன்தார் உடல் தகனம்

    சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது

    * தாமிரபரணி நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது

    17:47 (IST)25 May 2020

    பேருந்துகளை இயக்க முடிவு

    பெங்களூருவில் நாளை (மே.26) முதல் 3,500 பேருந்துகளை இயக்க முடிவு

    - பெங்களூரு போக்குவரத்துக் கழகம்

    17:31 (IST)25 May 2020

    ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

    வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேர் , வெளிமாநிலத்தில் இருந்து வந்த 25 பேர் உட்பட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

    - பினராயி விஜயன்

    * கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    17:15 (IST)25 May 2020

    பூட்டிய வீட்டிற்குள் முதியவர்களின் சடலம்

    'சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்களின் சடலம்'

    அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதி ஜீவன் - தீபாவின் உடல்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

    * துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்த மக்கள் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் நேரில் விசாரணை

    17:02 (IST)25 May 2020

    தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா

    தருமபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு பாதிப்பு இருப்பது கண்டறியபடுள்ளது.

    16:26 (IST)25 May 2020

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    15:22 (IST)25 May 2020

    சென்னை அரசு மருத்துவமனையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று

    சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    14:43 (IST)25 May 2020

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

    சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி.

    14:14 (IST)25 May 2020

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முககவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    13:36 (IST)25 May 2020

    ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்புவார் - எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் நலத்துடன் உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கைவிடுத்துள்ளது. முழு உடல் பரிசோதனை நடைபெற்றதாகவும், இன்று மாலை வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.   

    13:05 (IST)25 May 2020

    செவிலியர்களின் வேலைப்பளுவினை அரசு கவனிக்க வேண்டும் – ஸ்டாலின்

    செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கைவிடுத்துள்ளார். அந்த அறிக்கையில்," தீவிர சிகிச்சை பிரிவில் 395 நோயாளிகளுக்கு ஒரு ஷிபிட்-ல் 26 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் . வாடகை வீட்டில் எழும் சிக்கல்களால் குடுபத்தினரைப் பிரிந்து, மருத்துவமனையிலேயே தனித்திருக்க வேண்டிய நெருக்கடியில்  செவிலியர்கள் தம் வேலைப்பளுவும் கூடி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தொகுப்பூதிய முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள செவிளிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும்"  என கோரிக்கை வைத்துள்ளார்.            

    12:23 (IST)25 May 2020

    இந்தியாவில் 72 சதவீத கொரோனா தொற்று 10 நகரங்களில் இருந்து பதிவாகியுள்ளது.

    12:19 (IST)25 May 2020

    உதான் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டம்

    உள்நாட்டு விமான சேவை தொடங்கியதை அடுத்து உதான் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டம். வடகிழக்கு மாநிலங்களுக்கும், மலைப் பகுதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்  என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.  

    12:16 (IST)25 May 2020

    வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   

    12:05 (IST)25 May 2020

    கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 4781

    மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளவர்கள் - 5655 

    11:48 (IST)25 May 2020

    துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமது

    துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் சென்னை தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றும்; மாலையே வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.   

    11:01 (IST)25 May 2020

    அபராதத் தொகையாக இதுவரை ரூ. 7.63 கோடி வசூல் செய்யப்பட்டது- தமிழக காவல்துறை

    தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அபராதத் தொகையாக இதுவரை ரூ. 7.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக  தமிழக காவல்துறை தெரிவித்தது.  

    10:39 (IST)25 May 2020

    ஊரடங்கு மே 31-ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா? முதல்வர் நாளை ஆலோசனை

    தமிழகத்தில் நான்காவது பொதுமுடக்கம் வரும் மே  31 தேதியோடு முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    10:28 (IST)25 May 2020

    கொரோனா பரிசோதனை தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு - ஐசிஎம்ஆர் கவலை

    கடந்த நான்கு வாரங்களில் கொரோனா பரிசோதனை தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக ஐசிஎம்ஆர் தரவுகள் தெரிவிக்கின்றன.       (உதாரணமாக, 10 பேரிடம்  மேற்கொள்ளப்பட்ட  கொரோனா பரிசோதனையில், எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது என்பதை கண்டறியும் விகிதம்) 

    ஏப்ரல் 16 முதல் 28 வரை, இந்த பரிசோதனை தேர்ச்சி விகிதம் 4.8 சதவீதத்திலிருந்து 3.0 ஆக சரிந்தது. ஆனால் இது மே 23 ஆம் தேதி முடிவில் 7.0 ஆக உயர்ந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விக்கு பதிலளித்த ஐசிஎம்ஆர் டிஜி பால்ராம் பார்கவா, தேர்ச்சி விகிதம் உயர்வது கவலைக்குரிய விஷயம் என்று ஒப்புக்கொண்டார். கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஷ்ராமிக் ரயில்ககள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

    10:07 (IST)25 May 2020

    நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் புது நடைமுறை பின்பற்ற தலைமைச் செயலாளர் உத்தரவு

    நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு. நோய் பரவ அதிக வாய்ப்புள்ள மக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள்  போன்றோருக்கு கொரோனா தொற்று ஏற்படமால் இருக்க இந்த புது நடைமுறை பின்பற்ற வருகிறது.    

    09:58 (IST)25 May 2020

    25 விமானம் மட்டுமே சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்கப்படும்

    இன்று முதல் உள்ளூர் விமான சேவை துவங்க உள்ள நிலையில் வெளியிலிருந்து வரும் 25 விமானம் மட்டுமே சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்கப்படும். சென்னையிலிருந்து எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

    09:56 (IST)25 May 2020

    77,103 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்

    இந்தியாவில், நேற்றிலிருந்து இன்று வரை 6767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,38,845ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 77,103 ஆகும். இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து இது வரை 57,720  பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2657 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில், குணமடையும் சதவீதம் 41.28 சதவீதமாக உள்ளது. கொரோனா உயிரழப்பு எண்ணிக்கை 4021 ஆக அதிகரித்துள்ளது.

    Coronavirus Latest Updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதில் சென்னையின் பங்கு மட்டும் 10,576 ஆகும். இதில் 4,844 பேர் குணமடைந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதில் சென்னையின் பங்கு மட்டும் 587 ஆகும். மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களில், 80 சதவீதம், சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

    புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக்கடை மற்று கள்ளுக்கடைகளில் விற்பனை தொடங்குகிறது. மதுபானங்களுக்கு 20% சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment