திரிபுரா மக்களை கூட்டி சென்ற தமிழக ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக, சென்னையில் சிக்கித் தவித்த திருபுரா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை இறக்கி விட சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக, சென்னையில் சிக்கித் தவித்த திருபுரா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை இறக்கி விட சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா தொற்று எதிர்த்துப் போரிட அமலில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் காரணமாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இந்த சிக்கித் தவிக்கும் நபர்களின் சாலை வழிப் பயணத்தை மத்திய அரசு நேற்று அனுமதித்த நிலையில், சென்னையில் சிக்கித் தவித்த ஐந்து திருபுரா மாநிலத்தவரை இறக்கி விட சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரத்தன் லால் நாத் நேற்று தெரிவித்தார்
Advertisment
திருபுரா தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாத், கோமதி மாவட்டம் உதய்பூர் வட்டம் மற்றும் தெற்கு திரிபுராவின் பைகோராவைச் சேர்ந்த ஐந்து பேர் சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு பயணப்பட்டனர் . இவர்கள், கடந்த, ஏப்ரல் 27 அன்று திரிபுரா-அசாம் மாநில எல்லையில் அமைந்துள்ள சுரைபரி சோதனைச் சாவடியை அடைந்தனர்" என்றார்.
எந்த அறிகுறிகளும் இல்லாததால், ஸ்க்ரீனிங் செய்த பின் அனுமது வழங்கப்பட்டது . ஏப்ரல் 27 இரவு அவர்கள் உதய்பூரை அடைந்தனர். வீட்டில் தனிமைப்படுத்தியதோடு, இரண்டு ஓட்டுனர்கள் உட்பட ஏழு பேரிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஓட்டுநர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது பாஸ் செல்லுபடியாகும் என்பதால் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்,”என்று கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் தற்போது மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .ஐந்து பயணிகள் மற்றும் இரண்டாவது ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதானையில் தெரிய வந்துள்ளது. யாருக்கும் உடனடி ஆபத்து இல்லை என்று நாத் கூறினார். எவ்வாறாயினும், ஐந்து பயணிகளுக்கு தற்போது கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர், மீண்டும் அவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.
Advertisment
Advertisements
“அவர்களின் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் காலம் இன்னும் முடிவடையவில்லை. அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்யப்படும். அறிகுறிகள் தென்பட வில்லை என்பதற்காக ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கருதமுடியாது,”என்று லால் நாத் கூறினார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டு டிரைவருடன் தொடர்பில் இருந்த அனைத்து திரிபுரா மக்கலும் தொடர்பு தடமரிதல் செய்யப்பட்டு, சோதனை செய்யப்பட இருக்கிறார்கள்.
இதனால், தான் சிக்கித் தவிக்கும் நபர்களின் சாலை வழிப் பயணத்தை அனுமதிக்க வேண்டாம் என்று திருபுரா அரசு தொடர்ந்து வலியுறித்து வந்ததாக லால் நாத் தெரிவித்தார். மேலும், மாநிலத்திற்குள் நுழைய இதுவரை 6,000 பேர் பதிவு செய்திருந்தாலும், சுமார் 30,000-40,000 பேர் தற்போது நாட்டில் வேறு இடங்களில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது என்றும் கூறினார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil