டெல்லி பறந்த தங்கம் தென்னரசு… தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதில் ஸ்டாலின் தீவிரம்

Covid Injection Manufacturing : கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தமிழகத்தில் தயாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இநடத நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வரும் நிலையில். பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தை ஆளும் திமுக அரசு கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருகழுகுண்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக மத்திய அரசு ஒரு வார காலத்திற்குள் தனது முடிவை அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஒரு பில்லியன் அளவு மருத்து உற்பத்தி செய்யக்கூடிய இந்த வளாகம், மத்திய அரசாங்கத்தின் யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், கொரோனா தடுப்பு மருந்துக்கு தனியார் நிறுவனங்களை சார்ந்திருப்பதால் பெரும் விமர்சனம் எழுந்துள்ளது

இந்நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னராசு மற்றும் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லியில் பியூஷ்  கோயலை சந்தித்து தமிழக முதல்வரின் செய்தியை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னராசு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கூறுகையில்,, தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக மத்திய சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்குமா என்பது தெரிய வரும் என்று கூறினர்.

மேலும் தடுப்பூசிகளின் உற்பத்தியைத் தொடங்க, ரூ .300 கோடி முதலீடு செய்ய வேண்டும். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு இந்த வளாகத்தில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான டெண்டர்களை அறிவித்த்து. ஆனால் டெண்டர்களுக்கு குறைவாக வந்ததால், இந்த செயல்முறை தாமதமாகி வருகிறது. இந்த வளாகத்தின் உற்பத்தி திறன் மூலம், ஆறு மாதங்களுக்குள், இரண்டு கோடி அளவுகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு வருடத்தில் சுமார் எட்டு கோடி அளவுகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் அதிநவீன தடுப்பூசி உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன. யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் திரவ பென்டாவலண்ட் தடுப்பூசி (எல்பிவி), ஹெபடைடிஸ்-பி-தடுப்பூசி, ஹீமோபிலஸ் காய்ச்சல் வகை பி, ரேபிஸ் தடுப்பூசி, ஜப்பானிய என்செபாலிடிஸ் இ தடுப்பூசி, பிசிஜி தடுப்பூசி மற்றும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போன்ற வழக்கமான தடுப்பூசிகளை தயாரிக்க இந்த வசதி ஆரம்பத்தில் நிறுவப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (மே 25) அன்று இந்த வளாகத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு விரைவில் இங்கு தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார். ஏற்கனவே, 3.5 கோடி அளவிலான கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய டெண்டர்களை தமிழக அரசு அறிவித்த்து. தற்போது இந்த டெண்டர் மனுக்கள் ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த தடுப்பூசி வளாகத்தின் சொத்துக்களை கடந்த கால கடன்கள் இல்லாமல் மற்றும் முழு செயல்பாட்டு சுதந்திரத்துடன் மாநில அரசிடம் குத்தகைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் “மாநில அரசு உடனடியாக ஒரு பொருத்தமான தனியார் பாட்னரை அடையாளம் கண்டு, தடுப்பூசி உற்பத்தியை விரைவாக ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், மத்திய அரசு தனது முதலீட்டில் ஒரு பகுதியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான நிதி ஏற்பாட்டை பின்னர் செயல்பாடுகள் தொடங்கிய பின்னர் செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி மிக சக்திவாய்ந்த ஆயுதம் என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்த வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்குவது நாட்டின் திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்தமாக நாட்டின் தடுப்பூசி தேவைகளையும், தமிழகத்தின் தடுப்பூசி தேவைகளையும் பூர்த்தி செய்யும் . “எனவே, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி திறனை நாம் அதிகரிக்க வேண்டும் என்பது முற்றிலும் அவசியம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த உற்பத்தி வசதிக்காக மத்திய அரசு ஏற்கனவே சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, ஆனால் கூடுதல் நிதி தேவைப்படாததால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த தடுப்பூசி வளாகத்தை இயக்குவதற்கு ஒரு தனியார் பாட்னரை கண்டுபிடிப்பதற்கான சமீபத்திய முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government requested to pm modi for covid injection manufacturing in tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com