Advertisment

மருத்துவ மாணவர்களின் லேப்டாப் திருட்டு : தமிழகத்தை சேர்ந்த நபர் குஜராத்தில் கைது

தென்னிந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்களின் மடிக்கணினிகளை திருடிய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் கண்ணன் என்பவர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
மருத்துவ மாணவர்களின் லேப்டாப் திருட்டு : தமிழகத்தை சேர்ந்த நபர் குஜராத்தில் கைது

மருத்துவ மாணவர்களின் மடிக்கனிணிகளை (லேப்டாப்)குறி வைத்து திருடிய தமிழகத்தை சேர்ந்த 24 வயதான தமிழ்செல்வன் கண்ணன் என்பவரை குஜராத் மாநிலம் போலீசார் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கைது செய்தனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் நாடு முழவதும் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும், உள்ள பல மருத்துவ கல்லூரி விடுதிகளில் இருந்து சுமார் 500 மடிக்கணினிகளை திருடிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள எம்.பி. ஷா மருத்துவக் கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் புகுந்த அவர், அங்கிருந்து 6 மடிகனிணிகளை திருடியுள்ளார்.  இது தொடர்பாக ப வழக்கு பதிவு செய்த ராஜ்கொட் ஜாம்நகர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குபிறகு அவரை கைது செய்துள்ளனர்.

கடந்த “2015 ஆம் ஆண்டில், அவரது காதலியின் தவறான வீடியோவை இரகசியமாக பதிவு செய்த சென்னையை சேர்ந்த சில மருத்துவ மாணவர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், கடும் கோபமடைந்த தமிழ்ச்செல்வன் கண்ணன் அப்போது முதல் மருத்துவ மாணவர்கள் மீது தீராத ஆத்திரத்தில்  இருந்துள்ளார். இந்த ஆத்திரத்தின் வெளிப்பாக அவர்களை பழிவாங்க முடிவெடுத்த அவர், நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களை குறி வைத்து அவர்களின் மடிக்கணினிகளை திருடியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக  நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களின் விபரங்களை இணையத்தில் தேடிய அவர், அந்த மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரிகளின் பெயர்களையும் முகவரிகளையும் எடுத்து, அவர்களின் விடுதிக்கு அருகில் தங்கி சிலநாட்கள் நோட்டமிட்டு அதன்பிறகு அவர்களது மடிக்கணினிகளை திருடினார். இதில் மொபைல் திருடினால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் அவற்றை விட்டு மடிக்கணினிகளை திருடியுள்ளார். மேலும் மடிக்கணினிகள் விற்பது எளிது என்பதால் அதனை திருட திட்டமிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள கல்லூரிகளில் தனது மடிக்கணினி வேட்டையை முடித்த தமிழ்ச்செல்வன் கண்ணன், அடுத்து தனது பார்வையை வடஇந்தியா பக்கம் திருப்பியுள்ளார். அங்கு ஃபரிதாபாத்திற்கு அருகிலுள்ள பங்க்ரி கிராமத்திற்கு சென்ற அவர், அப்பகுதியில் உள்ள மருத்துவகல்லூரிகளில் நோட்டமிட்டுள்ளார்.  அதன்பிறகு குஜராத் மாநிலத்தின்  ஜம்நகரில் அனுபம் சினிமாவுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் தங்கி பெண்கள் விடுதியை நோட்டமிட்டுள்ளார். அதன்பிறகு அந்த விடுதியின் ஒரு அறையின் சாவியைக் கைப்பற்றிய அவர், கடந்த டிசம்பர் 26 தேதி விடுதி அறையின் உள்ளே நுழைந்து 6 மடிக்கணினிகளை திருடியுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜாம்நகரின் பி-பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கே.எல்.காதே கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment