வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (2.9.18) இரவு ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாகபெய்து வரும் கனமழையால் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தேனியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையாக வீடுகள் இடிந்து விழுந்தன. மார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் பழைய பஸ் நிலையம் அருகில் பெரியகுளம் சாலை, கம்பம் சாலை மற்றும் மதுரை சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று(2.9.18) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதுக் குறித்து அவர் கூறியதாவது,
“ தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளது.