நிலவில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன்; குவியும் பாராட்டுகள்!

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே இருக்கிறது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாதை தமிழக இளைஞர் பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் தனிமனிதராக கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

By: Updated: December 4, 2019, 09:27:05 PM

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே இருக்கிறது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாததை தமிழக இளைஞர் பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் தனிமனிதராக கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செப்டம்பர் மாதம் நிலவுக்கு சந்திரயான் – 2 வின்கலத்தை அனுப்பியது. அதனுடன் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை அனுப்பியது. விக்ரம் லேண்டர் நிலவில் சாஃப்ட் லேண்டிங் அடிப்படையில் தரையிறங்கும் வைகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நிலவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இஸ்ரோவுடனான தொடர்பில் இருந்து காணாமல் போனது. மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், லேண்டர் நிலவில் தரையிறங்கியதா அல்லது வேறு எங்கேனும் விழுந்துவிட்டதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவைச் சுற்றிவருகிற வின்கலம் செப்டம்பர் 17-இல் எடுத்த புகைப்படத்தைக் குறிப்பிட்டு நாசா விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கவில்லை என்று கூறினர். இஸ்ரோ விஞ்ஞானிகளும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான், நாசா நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் பாகங்களைக் கண்டுபிடித்து புகைபடங்களை வெளியிட்டது. இதற்கு மதுரையைச் சேர்ந்த இளைஞர் சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் நாசாவுக்கு உதவியுள்ளார்.


தற்போது சென்னையில் லினக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் வின்வெளி ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்த நிலையில், நாசா நிலவைச் சுற்றிவரும் வின்கலத்தில் உள்ள கேமராவில் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் வெளியிட்டது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த சண்முகம் சுப்பிரமணியன் நிலவில் விக்ரம் லேண்டர் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தனது கண்டுபிடிப்பு தொடர்பாக, சண்முக சுப்பிரமணியன் நாசாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலை ஆய்வு செய்தா நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியனைப் பாராட்டி பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாசாவும் நிலவின் மேற்பரப்பில் உடைந்து சிதறிக்கிடக்கும் விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டுபிடித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தனிநபராக விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்ததன் சண்முக சுப்பிரமணியன் உலகம் முழுவதற்கு தெரிய ஆரம்பித்துள்ளார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய, சண்முக சுப்பிரமணியன், “எனக்கு விண்வெளி அறிவியல் தொடர்பாக சிறு வயது முதல் தனி விருப்பம் இருந்து வருகிறது. இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு தொடர்பான நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள நான் தவறியதில்லை. அந்த வகையில், நாசா வெளியிட்ட பழைய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒன்று நாசாவால் ஏற்கனவே எடுக்கப்பட்டது. மற்றொன்று புது புகைப்படம் ஆகும். இந்த ஆய்வு சற்று கடுமையாகவும், நிறைய நேரத்தை செலவிடக்கூடியதாகவும் அமைந்தது. ஒருவழியாக எனது கண்டுபிடிப்பை நாசாவுக்கு அக்.03-ஆம் தேதி டுவிட் செய்தேன். இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பினேன்.


எனது கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். பின்னர், அவர்கள் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த பின்னர், என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக குறிப்பிடப்படும் இடத்திற்கு 750 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டரின் பாகங்களைக் கண்டறிய முடிந்தது.

செப்டம்பர் 17-இல் நாசா எடுத்த புகைப்படம் இருளில் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அக்டோபர் 15 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால், நாசாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அந்த புள்ளியைக் கண்டுபிடித்தேன்.

இதையடுத்துதான், நாசா நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து விக்ரம் லேண்டரின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மற்றபடி, எனக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் எல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்து அதன் மூலம் ஆய்வு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

சண்முக சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு குறித்து நாசாவின் மூத்த விஞ்ஞானி பெட்ரோ என்பவர் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது. தனியொரு மனிதனின் கண்டுபிடிப்பு எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. சந்திரயான்-2 மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒருவர் எங்கள் தகவல்களைப் பயன்படுத்தி விக்ரம் லேண்டர் இருப்பிடம் தொடர்பான அரிய தகவலை கண்டுபிடித்துள்ளார். அந்த புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலாக ஆய்வு செய்து இதை சாத்தியப்படுத்தியுள்ளார் என்று அவரைப் பாராட்டியுள்ளார்.


இதன் மூலம், தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், நாசா விஞ்ஞானிகளாலும், இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க முடியாததை தனிமனிதராக கண்டுபிடித்து ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். சண்முக சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu youth shanmuga subramanian found chandrayaan 2s vikram lander in lunar surface nasa credits to him

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X