பாஜக கட்சியின் தலைவர் தருண் விஜய் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மோடியைப் பற்றி அவதூறான கருத்துகள் நேற்று நள்ளிரவு பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்து தருண் விஜய்யின் அட்மின் நீக்கப்பட்டதோடு, அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருண் விஜய் ட்விட்டர் கருத்து சர்ச்சை
2019ம் ஆண்டு வரப்போகும் தேர்தல்களை முன்னொட்டியே இது போன்ற விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறார்கள் என்று வருத்தத்தினை பதிவு செய்திருக்கிறார் தருண் விஜய்.
நேற்றிரவு பதிவான தருண் விஜய்யின் ட்விட்டர் கருத்து
நன்றி கூறிய தருண் விஜய்
நானும் என் குடும்பத்தினரும் வாழ்நாள் முழுவதும் பாஜகவிற்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கும் கடமைப்பட்டவர்கள். காலை முதல் இரவு வரை அவர்களுக்காகவே நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இது போன்ற இக்கட்டான நிலையில் என்னை நம்பிய, எனக்கு உறுதுணையாய் செயல்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து கருத்து பதிவு செய்திருக்கிறார்.
நேற்று பத்து மணியில் இருந்து பதிவு செய்த ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் நீக்கி, புதிய கடவுச்சொல்லினை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் அந்த ட்விட்டரில் கூறியிருக்கிறார்.