Advertisment

ஏர் இந்தியா ஏலம்: ரேஸில் டாடா முன்னிலை

ஏலத்தில் வென்ற நிறுவனம் மேற்கோள் காட்டப்பட்ட நிறுவன மதிப்பில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை ரொக்கமாக அரசுக்கு செலுத்த வேண்டும், மீதமுள்ளவை கடனாக எடுத்து கொள்ளப்படும்

author-image
WebDesk
New Update
ஏர் இந்தியா ஏலம்: ரேஸில் டாடா முன்னிலை

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை ஏலம் எடுக்கும் ரேசில், டாடா குழுமம் முன்னிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Advertisment

இந்த ஏலத்தில் பங்கேடுத்த ஸ்பைஸ்ஜேட் நிறுவனர் அஜய் சிங் குறிப்பிட்ட தொகையை விட ரூ.5 ஆயிரம் கோடி அதிகமாகக் கொடுத்து மும்மை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம், ஏர் இந்தியாவை கைப்பற்றியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ தகவலானது உள்துறை அமித் ஷா தலைமை தாங்கும் AISAM குழுவிடமிருந்து வர வேண்டும். இந்தக் குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உள்ளனர்.

மூன்றாவது முறை

இது மத்திய அரசின் மூன்றாவது முயற்சியாகும். ஏற்கனவே 2001 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தன. ஏலம் எடுத்திட யாரும் முன்வராததால், ஏல விதிமுறையில் சில மாற்றங்களைச் செய்து கடந்தாண்டு மீண்டும் ஏர் இந்தியாவை மத்திய அரசு ஏலத்தில் இறக்கியது

மூத்த அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், ஏலத்தின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட 15 நாள்களுக்குள், பங்கு வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். வரும் பிப்ரவரி பிற்பகுதிக்குள் சொத்துக்களை முழுமையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டின் ஏல செய்முறையைப் போல் இல்லாமல், இந்தாண்டு முக்கிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. என்னவென்றால், பழைய ஏல பங்குகள் 76% போல் இல்லாமல், இந்தாண்டு 100% பங்குகளை இறக்குவதாகக் கூறியது தான்.

இந்த பங்கு விற்பனையில் ஏர் இந்தியாவின் 100% ஏஐ எக்ஸ்பிரஸ் லிமிடெட் மற்றும் 50% ஏர் இந்தியா எஸ்ஏடிஎஸ் விமான நிலைய சேவைகள் தனியார் லிமிடெட் ஆகியவை அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தொகைகளில் குறிப்பிட்ட தொகை அதன் துணை நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே, பங்குகளை வாங்கவுள்ள நிறுவனங்கள், மொத்தமுள்ள கடன் தொகையில் 23,286 கோடி செலுத்தினால் போதுமானது. ஏர் இந்தியாவிற்கு 60,074 ரூபாய் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது மீண்டும் ஏலத்தாரர்கள் சிக்கலாகத் தான் இருந்தது. கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு, விமான துறையை கடுமையாகப் பாதித்தது. குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஏல அளவுருக்களில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஏர் இந்தியாவின் கடன் தொகையில் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிறுவனத்தின் மதிப்பின் அடிப்படையில் தங்கள் ஏலங்களை முன் வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஏலத்தில் வென்ற நிறுவனம் மேற்கோள் காட்டப்பட்ட நிறுவன மதிப்பில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை ரொக்கமாக அரசுக்கு செலுத்த வேண்டும், மீதமுள்ளவை கடனாக எடுத்து கொள்ளப்படும்

ஏர் இந்தியாவை வாங்குவது மூலம் டாடா குழுமத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். ஏனெனில் இதன் மூலம் உள்நாட்டு விமான நிலையங்களில் 1,800 சர்வதேச பார்க்கிங் இடங்களும், வெளிநாட்டு விமான நிலையங்களில் 900 இடங்களும், 4,400 உள்நாட்டு இடங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் . இது லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற முக்கிய இடங்களுக்கான பாதைகள் இடம்பெறுகிறது.

ஏர் இந்தியா 1932 இல் டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது. பின்னர், 1953 இல் தேசியமயமாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸூடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க முயன்றது. ஆனால், சில காரணங்களால் கடைசி நேரத்தில் ஏலம் திரும்பப் பெறப்பட்டது , தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில், டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் கூட்டு முயற்சியில் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கியது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில்
டாடா குழுமம் 83.67% பங்குகளை வைத்திருக்கிறது. தற்போது, ஏர் இந்தியாவும் குழுமத்தில் இணைந்துள்ளதால். அதன் விமான சேவைகளை ஒருங்கிணைக்க முடியும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

ஆகஸ்ட் 2021 நிலவரப்படி, மூன்று விமான நிறுவனங்களும் சேர்ந்து உள்நாட்டு விமான பயணிகள் சந்தையில் 26.7% சந்தைப் பங்கைக் கொண்டிருக்கிறது. இதில் ஏர் இந்தியா 13.2% சந்தைப் பங்கோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில், இண்டிகோ 57 சதவிகித பங்குகளுடன் உள்ளது.

Air India Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment