ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு : டாட்டா குழுமம் முதலீடு செய்ய ‘விருப்பம்’

மத்திய பட்ஜெட் 2020 : இந்திய ரயில்வே துறையின் 150 தனியார் பயணிகள் ரயில்களில் முதலீடு செய்ய டாடா குழுமம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

By: Updated: February 2, 2020, 11:46:19 AM

150 பயணிகள் ரயில்களை தனியார் துறைக்கு  விடப்படும் திட்டம் குறித்து நேற்றைய மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.  இந்த திட்டத்தில் இணைய  டாடா குழுமம்  ஆர்வம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயில் இந்திய அரசின்  ஏகபோகம் முடிவுக்குக் வருகிறது.

மத்திய பட்ஜெட் 2020-21: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

ரயில்வே போக்குவரத்து துறையில் குறைந்த பட்சம் ரூ .22,500 கோடி முதலீட்டை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆகையால், 150 ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் துறையினருக்கு 100 ரயில்வே பாதைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் உரிம கட்டணம் மற்றும் இதர ரயில்வே போக்குவரத்து சேவை கட்டணங்கள் மூலம் பணம் ஈட்டலாம் என்று இந்திய ரயில்வே துறை நம்புகிறது.


தனது உரையில், சித்தராமன், “நான்கு ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், பொது துறையில் தனியார் முதலீடு என்ற கணக்கில் 150 பயணிகள் ரயில்களை இயக்கப்படும் என்று அறிவித்தார். தனியார் பங்கேற்பை அழைக்கும் செயல்முறையும் நடந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

தண்டவாளங்கள் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் சூரிய மின்சக்தி திறனையும் அமைக்க சீதாராமன் முன்மொழிந்தார். இந்த சூரிய மற்றும் காற்றாலை மின் அமைப்புகளை அமைக்க 51,000 ஹெக்டேர் தடங்கள் பயன்படுத்தப்படும் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Explained: எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தைரியமான நடவடிக்கையா?

ரயில்வே துறையின் ஒட்டுமொத்த மூலதன செலவினமான ரூ .1.61 லட்சம் கோடிக்கு, அடுத்த மதிப்பீடு ஆண்டிற்கு ( ஏப்ரல் 2020- மார்ச் 2021) நிதி அமைச்சகம் தனது பட்ஜெட்டில் ரூ .70,250 கோடியை ஒத்துகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ .1.56 லட்சம் கோடி மூலதன செலவினத்திற்காக வழங்கப்பட்ட ரூ .68,104 கோடியியை விட இந்த ஒதுக்கீடு உயர்வாகும்.

ரயில்வே துறையின் இயக்க விகிதம்:  

இயக்க விகிதம் என்பது ஒவ்வொரு ரூ .100 சம்பாதிக்க எவ்வளவு செலவு  செய்யப்படுகிறது என்பதற்கான குறியீடு –

இயக்க விகிதம் குறைவாக இருந்தால், ரயில்வே துறை சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம்.

இந்திய ரயில்வே துரையின் இயக்க விகிதம் என்ன தெரியுமா?   97.4 சதவிகிதம். அதாவது, 100 ரூபாய் சம்பாதிக்க ரயில்வே துறை 97.4 செலவு செய்கின்றது என்பது இதன் பொருள்.

இந்திய ரயில்வேயின் செலவினங்கள் ரூ .2.02 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ( வருவாய் செலவு –  நிர்வாக செலவு, உட்பட) , அதே நேரத்தில் அதன் வருமானம் ரூ. 2.06 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

“எரிபொருளுக்கு ஆகும் செலவுகளை குறைப்பதன் மூலமாகவும்,  இதர சிக்கன நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவும்  செலவுகளை குறைக்க முயற்சிப்பதாக ரயில்வே கூறுகிறது. மேலும், அடுத்த ஆண்டிற்கான இயக்க விகித இலக்கை 96.2 சதவீதமாக ரயில்வே துறை நிர்ணயித்துள்ளது.

ரயில்வே துறையின் முக்கிய வணிகமான சரக்கு போக்குவரத்து  தனது சமநிலையை அடைந்து விட்டது.  உதரணமாக, இந்த நிதியாண்டிற்கான ஏற்றுதல் இலக்கு 1,223 மில்லியன் டன்களாக கணக்கீடப்பட்டுள்ளது, கடந்த நிதியாண்டை விட இதில் எந்த மாற்றமும் இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tatas interested to invest in 150 private trains

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X