மேற்கு வங்க பாஜக பிரிவு தலைவர்களுக்கிடையேயான சலசலப்பு ஓய்ந்தபாடில்லை. ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் மேகாலயா மற்றும் திரிபுரா ஆளுநர் ததாகதா ராய் தனது ட்விட்டர் பயோவில் Lately whistleblower என்பதை சேர்த்துக்கொண்டார். விசில்ப்போள்வர் என்பர் புகாரளிப்பவர் போன்று அர்த்தம். அவர் சமீபத்தில் விசில்ப்போள்வர் என்று குறிப்பிட்டுள்ளார்., கட்சிக்குள்ளான பல மோதல் வெளியே வரலாம் என வட்டாரங்கள் பேசத் தொடங்கின.
ராய் பாஜகவின் முன்னாள் மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷ், தற்போதைய கட்சியின் தேசிய துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளரும் மாநிலப் பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்கியா உட்பட பல கட்சித் தலைவர்களுடன் முரண்பாட்டில் உள்ளார். கட்சியிலிருந்து விலக வேண்டும் என ராய்க்கு கோஷ் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரது அறிவுறுத்தல் ஏற்க முடியாது என்பது போல் தனது ட்விட்டர் பயோவில் BJP என்பதையும் இணைத்துள்ளார்.
மருத்துவச் சிகிச்சைக்கு உதவிய வெங்கையா பேத்தி
அடுத்த மாதம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேத்தி சுஷ்மாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அவர் தனது திருமண செலவைக் குறைக்க முடிவு செய்தார்.
திருமணத்திற்கு ஆக வேண்டிய செலவை, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக வழங்க பெற்றோர் மற்று தாத்தா-பாட்டிக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இதய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட்டது இதற்கான காசாலோயை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹ்ருதயா - க்யூர் எ லிட்டில் ஹார்ட் அறக்கட்டளைக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாயுடுவின் மகள் தீபா வெங்கட் நடத்தும் ஸ்வர்ண பாரதி அறக்கட்டளையின் 20வது ஆண்டு விழாவின் தலைமை விருந்தினராக ஷா வருகை தந்திருந்தார். இந்த அறக்கட்டளை கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. மக்களுக்கு உதவும் மணமகளின் பெற்றோர் மனப்பான்மையை அமைச்சர் அமித் ஷா பாட்டினார்.
எதிர்பாராத பாராட்டு
இடைத்தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியதால், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு அடுத்தாண்டு மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வேறு பதவி வழங்கப்படலாம் என்றும், இமாச்சலுக்கு வெறோரு நபர் முதல்வராக வாய்ப்புள்ளது என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா, மாநிலத்தில் முதல்வர் செய்த பணியைப் பாராட்டியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஜெயஸ்ரீ பானர்ஜியின் மகள் மல்லிகா ஆவர். அவர், வலுவான சமூகம், மாநிலம், தேசத்தை உருவாக்க அனைத்து இமாச்சல் வாசிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil